இணையப் பாதுகாப்பு குறித்த இலவசப் பயிலரங்கு

இணையப் பாதுகாப்பு குறித்த இலவசப் பயிலரங்கு

1 mins read
22292350-023a-4b69-ba68-181cee6f5b88
படம்: - தமிழ் முரசு

இணையப் பாதுகாப்பு குறித்த இலவசப் பயிலரங்கிற்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

எண் 1 பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா உள்ளரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இப்பயிலரங்கு நடைபெறும்.

தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜமீல் முஹம்மது மன்சூர் பயிலரங்கை நடத்தவிருக்கிறார்.

இப்பயிலரங்கில் மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு: tinyurl.com/azm73d98.

கூடுதல் விவரங்களுக்கு 96933786 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்