தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசா சென்சரிஸ்கேப்பில் மனம் மயக்கும் மலர்வட்டங்கள்

1 mins read
27fde88b-0261-4b52-b8fa-9aca3fd4b045
செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள். - படம்: த.கவி
multi-img1 of 3

தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சென்சரிஸ்கேப்பில் 7.5 மீட்டர் விட்டமுடைய மலர்வட்டம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26ஆம் தேதிவரை அதனைக் கண்டுகளிக்கலாம்.

சென்சரிஸ்கேப்பின் கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, சிங்கப்பூர்க் கலைஞர் கிறிஸ் சாய் அந்த மலர்வட்டத்தையும், ‘வான விளக்கு’ என அழைக்கப்படும் பெரிய கூண்டுவிளக்குகளையும் வடிவமைத்துள்ளார். 

இவை, சமகால சிற்பக் கலை வடிவத்தில் தீபாவளித் திருநாளை எடுத்துக்காட்டுகின்றன. 

Watch on YouTube

புதுப்பிப்பையும் எதிரொளிப்பையும் எடுத்துக்காட்டும் வகையில், சென்சரிஸ்கேப்பையும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவையும் இணைக்கும் பாதையில் எட்டு மலர்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள்
செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள் - படம்: த.கவி
செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள்.
செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள். - படம்: த.கவி

ஒவ்வொரு மலர்வட்டமும் தெளிவான கோடுகளாலும் நுணுக்கமான வடிவமைப்புகளாலும் ஒவ்வொரு கோணத்திலும் புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறது.

சிம்ஃபொனி ஸ்ட்ரீம்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 12 முகக் கூண்டுவிளக்கானது ஒளியையும், வரைகணிதத்தையும், நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைக்கிறது. 

மயிலின் அழகையும் புதுப்பிப்பையும் மையமாகக் கொண்டு அந்த வடிவமைப்புகள் அமைந்துள்ளன. 

அவை பகலிலும் இரவிலும் நிலத்தில் எதிரொளிக்கும்போது புதுமையான விளைவை உருவாக்குகின்றன.

செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள்.
செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள். - படம்: த.கவி

செந்தோசா சென்சரிஸ்கேப்பில் வண்ணங்களும், ஆற்றலும், எதிரொளிப்பும் நவீனத்துவத்துடன் தீபாவளி மரபுடன் ஒன்றுகலந்து தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்