இறைச்சிகளை விரும்பி உண்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் ‘ரெட் மீட்’ என்று அழைக்கப்படும் இறைச்சி வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள், சில வகை புற்று நோய்கள் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்று அடிக்கடி மருத்துவ ஆய்வாளர்கள் கூறுவார்கள்.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஓர் ஆய்வின் தகவல்கள் சற்று வித்தியாசமாக வந்துள்ளது.
இறைச்சிகளை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 20ஆம் தேதி லான்செட் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் அமைப்பு தனது ஆய்வுத் தகவலை வெளியிட்டது.
31 ஆராய்ச்சிகளை ஆராய்ந்து 20 நாடுகளைச் சேர்ந்த 2 மில்லியன் மக்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன.
ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களின் உணவுப்பழக்கம் சராசரியாக 10 ஆண்டுகள் கணக்கிடப்பட்டது.
அதில் தினமும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை 51 கிராமுக்கு மேல் சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 15 விழுக்காடு கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரம் ‘ரெட் மீட்’ இறைச்சியை 99 கிராமுக்கு மேல் சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 10 விழுக்காடு கூடும் என்று ஆய்வு கூறுகிறது.
அதேபோல் கோழி வகைகளையும் தினமும் சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 8 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
ஆய்வில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி ‘ரெட் மீட்’ இறைச்சி வகைகளை அவ்வப்போது குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

