தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஃபேர்பிரைஸ்’ தீபாவளிக் கொண்டாட்டம்

2 mins read
2323948f-e35f-49dc-8058-7681fe4a5401
தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரம் இரவில் வண்ண விளக்குகளின் ஒளியில் மிளிர்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ‘ஃபேர்பிரைஸ்’ பல நடவடிக்கைகளையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வரை ‘ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா’ கடைகள் அனைத்திலும் தீபாவளிச் சந்தை இடம்பெறும்.

அதில் பானி பூரி, ஹால்திராம் உணவு வகைகள், பாரம்பரியத் தென்னிந்திய டீ, காப்பி வகைகள், ட்ராதிசி குக்கீ வகைகள், புத்துணர்ச்சியூட்டும் தயிர், லஸ்ஸி வகைகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் சுவைக்கலாம்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட்ட சில ‘ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா’ கடைகளில் பிற்பகல் 1 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வாடிக்கையாளர்கள் அந்த உணவுகளை நேரடியாகச் சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

ஹவ்காங் பாயின்ட், சாங்கி தொழிற்பேட்டை, பார்க்வே பரேட், ஜூரோங் பாயின்ட், ஜெம் ஆகிய கடைத்தொகுதிகளில் அமைந்துள்ள ‘ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா’ கடைகளில் அந்த உணவு வகைகளை நேரடியாகச் சுவைத்துப் பார்க்கலாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் சிறப்பாகப் பரிந்துரைக்கப்பட்ட தீபாவளி அத்தியாவசியப் பொருள்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளைப் பெறலாம்.

அத்துடன், குடும்பத்தினர், நண்பர்களுடன் தங்கள் கொண்டாட்ட உணர்வை மேம்படுத்த உதவும் ஏராளமான இனிப்பு, பலகார வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ‘ஃபேர்பிரைஸ்’ குழுமத்தின் புகழ்பெற்ற வீவக வீட்டுக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி, செங்காங் வெஸ்ட் சாலையில் அமைந்துள்ள புளோக் 458ன் பன்னோக்கு மண்டபத்தில் இந்திய இசை, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டவுள்ளது.

காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் ஜாலான் காயு அடித்தள அமைப்புக்கான ஆலோசகர் இங் சீ மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.fairprice.com.sg/deepavali/ இணையத்தளம் அல்லது https://www.instagram.com/fairpricesg/ இன்ஸ்டகிராம் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்