பென்கூலன் பள்ளிவாசலில் இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆதரவற்ற குழந்தைகளுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
‘இது நம்ம இஃப்தார், அரவணைக்கும் இஃப்தார்’ எனும் கருப்பொருளுடன் கூடிய இந்நிகழ்ச்சிக்குத் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி கலந்துகொண்டார்.
அப்போது, தமிழ் பேச்சுமொழியாகத் தழைக்க குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தமிழிலேயே பேசுங்கள் என்று இளையர்களிடத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக தாருல் இஹ்சான் குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தைகளும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அக்காப்பகத்திற்குத் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் சார்பாக $2,000 நன்கொடை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர், இணை அமைப்புகளின் தலைவர்கள், சிங்கப்பூர்வாழ் தோப்புத்துறைச் சொந்தங்கள் என ஏறக்குறைய 250 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.