ஆசியாவின் ஆகப்பெரும் மின் விளையாட்டுப் போட்டியான ‘ஹீரோ ஈஸ்போர்ட்ஸ்’ (Hero Esports Asian Champions) ஆசிய வெற்றியாளர் கிண்ணப்போட்டி, சீனாவிலுள்ள ஷாங்ஹாயில் தொடங்கியுள்ளது.
மே 16 முதல் 18 வரை, ஷாங்காயிலுள்ள எஸ்பிடி பேங்க் ஓரியண்டல் விளையாட்டு மையம், ஜிங்கான் விளையாட்டு மையம், தேசிய கண்காட்சி மாநாட்டு மையம் ஆகியவை, ஒன்பது வெற்றிக்கோப்பைகளுக்கானக் களங்களாகச் செயல்படுகின்றன.
‘கவுண்டர்ஸ்ட்ரைக் 2’ (Counterstrike 2), ‘டோட்டா 2’ (Dota 2), ஹானர் அஃப் கிங்ஸ் (Honour of Kings), ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர் 6’ (Street Fighter 6), ‘லீக் அஃப் லெஜண்ட்ஸ்’ (League of Legends), ‘டீம்ஃபைட் டேக்டிக்ஸ்’, ‘வெலொரன்ட் சேம்பியன்ஸ் டுவர்’, ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ (Delta Force), ‘க்ராஸ்ஃபையர்’ (Crossfire) ஆகிய விளையாட்டுகளில் தலைசிறந்த எட்டுக் குழுக்கள் பெருதுகின்றனர்.
சீனா, ஃபிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 2 மில்லியன் டாலர் பரிசுத்தொகை இந்தப் போட்டியின்வழி வெற்றியாளர்களுக்குக் கிடைக்கவுள்ளன. அத்துடன் வெற்றியாளர்கள், மின் விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகக் கோப்பைக்குத் தகுதிபெறுவர். அந்தப் போட்டி, சவுதி அரேபியாவில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறவுள்ளது.

