திரைப்பட இயக்குநர் லிங்குசாமியுடன் கலந்துரையாடல்

1 mins read
cbec518a-067d-466b-b611-7e73363721d9
இயக்குநர் லிங்குசாமி. - படம்: ஊடகம்

முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளார்.

சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பு, 8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட் திரைப்பட நிறுவனத்துடனும் சிங்கப்பூர்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்துடனும் இணைந்து இயக்குநர் லிங்குசாமியுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிராங்கூன் சாலை, ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் மார்ச் 1ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கலந்துரையாடல் இடம்பெறும்.

கவிதை, இலக்கியம், திரைப்படத்துறை ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்யும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கும் பெயர் பதிவிற்கும் - திரு மா. அன்பழகன், 9005 3043.

குறிப்புச் சொற்கள்