பெரனாக்கன் வரலாற்றை எடுத்தியம்பும் நிகழ்ச்சிகள்

3 mins read
ff0e2828-807f-4535-92c6-9b90e7af49c5
‘சமூகக் குரல்கள்: எமரால்டு கதை’ நிகழ்ச்சி குறித்த விளம்பரப் பதாகை. - படம்: பெரனாக்கன் அரும்பொருளகம்

பெரனாக்கன் கலாசாரத்தின் பன்முகத்தன்மை குறித்தும் அதனைப் பேணும் உத்திகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில், பெரனாக்கன் அரும்பொருளகத்தில் ‘சமூகக் குரல்கள்: எமரால்டு கதை’ (An Emerald Tale) எனும் கருப்பொருளில் நிகழ்sசிகள் நடைபெறவுள்ளன.

பெரனாக்கன் கலாசாரத்தின் ஆளுமை, கைவினைத்திறன் குறித்துப் பலர் அறிந்திராத தகவல்களை அறியும் வண்ணம் பல்வேறு அமர்வுகளைப் பெரனாக்கன் அரும்பொருளகமும் சிங்கப்பூர் பெரனாக்கன் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ஜூன் மாதம் 14, 15 நாள்களில், பெரனாக்கன் நகைகள், கட்டடக்கலை, கைவினைத்திறன், சமையற்கலை உள்ளிட்டவை குறித்து அறியும் பயிலரங்குகளிலும், சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாக்களிலும் வருகையாளர்கள் கலந்துகொள்ளலாம்.

பெரனாக்கன் முன்னோடிகள்

சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தை உணர்வுபூர்வமாக அனுபவிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான திரு ஷான் சியாவின் நூல் வாசிப்பு அமர்வில் கலந்துகொள்ளலாம்.

பெரனாக்கன் சமூகத்தினரின் புத்துணர்ச்சியளிக்கும் கதைகளின் மூலம் சிறுவர்களின் புனைவிலிப் புத்தகத் தொடரை வாழ்விற்குக் கொண்டுவருகிறது இந்நிகழ்ச்சி.

நாள்: ஜூன் 14

நேரம்: காலை 10.30 மணி - நண்பகல் 12 மணி

இடம்: இக்சோரா அறை (Ixora Room), பெரனாக்கன் அரும்பொருளகம்

அணிகலன்களை உள்ளடக்கும் குடும்ப பாரம்பரியம்

பெரனாக்கன் அணிகலன்களின் வளமான வரலாறு, நகைகளின் வடிவங்களில் உள்ளடங்கியுள்ள பொருள் என நுண்ணிய கருத்துகளைத் தெரிந்துகொள்ள இப்பயிலரங்கிற்குச் செல்லலாம்.

நாள்: ஜூன் 15

நேரம்: காலை 10.30 மணி - நண்பகல் 12 மணி

இடம்: இக்சோரா அறை (Ixora Room), பெரனாக்கன் அரும்பொருளகம்

கைவினைக்கலை

பெரனாக்கன் மணிகளைக் கொண்டு காலணிகளையும் பெரனாக்கன் இனிப்புகளின் வடிவங்களைக் கொண்டு கைவிசிறிகளையும் சொந்தமாக வடிவமைக்கலாம்.

நாள்: ஜூன் 14, 15

நேரம்: நண்பகல் 12 மணி - மாலை 5 மணி

இடம்: முகப்பறை (Lobby), பெரனாக்கன் அரும்பொருளகம்

ஆடலும் பாடலும்

பெரனாக்கன் சாயாங், மெலிசா சிடெக் (Melissa Sidek) குழுவினரோடு சேர்ந்து பழைய பெரனாக்கன் பாடல்களுக்கு நடனமாடி மகிழலாம்.

நாள்: ஜூன் 14, 15

நேரம்: நண்பகல் 12.30 மணி

இடம்: முகப்பறை (Lobby), பெரனாக்கன் அரும்பொருளகம்

பெரனாக்கன் சமையற்கலை

புகழ்பெற்ற பெரனாக்கன் இனிப்புப் பண்டமான குவே டாடர் (Kueh Dadar) செய்முறையையும் மறைந்துவரும் உணவான புட்டு தெகைர் (Putu Tegair) செய்முறையையும் கற்றுக்கொண்டு அவற்றைச் சுவைத்து மகிழ இப்பயிலரங்கிற்கு முன்பதிவு செய்யலாம்.

நாள்: ஜூன் 14, 15

நேரம்: நண்பகல் 2 மணி - பிற்பகல் 3.30 மணி

இடம்: இக்சோரா அறை, பெரனாக்கன் அரும்பொருளகம்

நகரப்புற வீடு (Townhouse)

ஒரு நூற்றாண்டில் தேய்ந்துபோன கட்டடத்தின் அரிய கட்டடக்கலை விவரங்கள் பற்றியும் திறமையான மறுசீரமைப்புக் கைவினைஞர்கள் நடத்தும் ஆழமான ஆராய்ச்சியைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் அறிந்துகொள்ளலாம்.

நாள்: ஜூன்14

நேரம்: மாலை 4 மணி - 5 மணி

இடம்: இக்சோரா அறை, பெரனாக்கன் அரும்பொருளகம்

ஆர்மீனியன் சாலையில் கதைகள்

சிங்கப்பூர் பெரனாக்கன் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டெல்லாவுடன், ஒரு காலத்தில் ஆர்மீனியத் தெருவில் கட்டடங்களை ஆக்கிரமித்த நிறுவனங்களின் வரலாற்றையும் கதைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

நாள்: ஜூன் 15

நேரம்: மாலை 4 மணி - 5 மணி

இடம்: பெரனாக்கன் அரும்பொருளக முதல் மாடி

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கட்டணம் இலவசம்.

மேல்விவரங்களுக்குப் பெரனாக்கன் அரும்பொருளகத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்