சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யும் கம்பன் விழா இந்த முறை சனிக்கிழமை, அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கும்.
‘அறம் தரு சிந்தை’ எனும் தலைப்பில் திரு. ஞானசேகரன்,
‘அந்தமில்லா அன்பு’ எனும் தலைப்பில் திருவாட்டி வானதி பிரகாஷ் ஆகிய இருவரும் சிறப்புரை வழங்கவிருக்கின்றனர்.
கம்பன் விழாவையொட்டி உயர்நிலை மாணவர்களுக்கும் உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கும் நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட புதிர்ப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு நிகழ்ச்சியின்போது பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் திரு த. ராஜசேகர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.