சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 130வது கதைக்களம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வித்யா அருணின் ‘காலாழ் களரில் உலகு’ எனும் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடல் அங்கம் இடம்பெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) பிற்பகல் 4 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவுள்ளது. நூலாசிரியருடனான கலந்துரையாடல் அங்கமும் உண்டு.
கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும், வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்மொழி விழா நடைபெறுவதால் அடுத்த கதைக்களம் மே மாதம் நடைபெறும்.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் மே மாத சிறுகதைப் போட்டிக்கான படைப்புகளைக் கணினியில் தட்டச்சு செய்து https://forms.gle/VdpmyEfdVas5wtMLA எனும் மின்னணுப் படிவத்தின் வழியாக 25/4/2025 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16, பிரதீபா வீரபாண்டியன் - 81420220, பிரேமா மகாலிங்கம் - 91696996.

