சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 131வது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 18) பிற்பகல் 3.00 மணிக்கு, தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ‘விபிஆர்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
இதில், எழுத்தாளர் பாலா சங்கரின் ‘சிறுகதைகளும் உணர்வுத் துளிகளும்’ சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய நூல் அறிமுகம் இடம்பெறவிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் சவிதா இந்நூலின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்வார்.
போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். எழுத்தாளர் கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினர் கவின் சசிகுமார் நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
ஜூன் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஜூன் மாதச் சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு (200 - 300 சொற்கள்):
அடிக்கடி கனவில் வந்த காட்சியை, அன்று கண் முன்னே கண்டேன்.
இளையர் பிரிவு (300 - 400 சொற்கள்):
தொடர்புடைய செய்திகள்
எங்கும் கறும்புகை சூழ, எந்தப் பக்கம் ஓடுவதென்றே எங்களுக்குப் புரியவில்லை.
பொதுப்பிரிவு (400 - 500 சொற்கள்):
ஆறு மாதமாகியும் நினைத்ததை முடிக்க முடியவில்லையே என்ற தவிப்பு எனக்கு ஏற்பட்டது.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு, https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக வெள்ளிக்கிழமை மே 23ஆம் தேதிக்குள் அனுப்பவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16 என்ற இணையப்பக்கத்தையோ 81420220 என்ற தொலைபேசி எண்ணில் பிரதீபா வீரபாண்டியனையோ 91696996 என்ற எண்ணில் பிரேமா மகாலிங்கத்தையோ நாடலாம்.

