கவிமாலை அமைப்பின் செப்டம்பர் மாதக் கூடுகையில் எழுத்தாளர், பேச்சாளர் எனப் பல்திறன் வித்தகரான காப்பியக் கவிஞர் முனைவர் அ.உசேன் கலந்துகொள்ள இருக்கிறார்.
‘கவிநடையில் காப்பியம்’ எனும் தலைப்பில் அவர் சிறப்புரையாற்றுவார்.
12 காப்பியங்கள், 38 கவிதை நூல்கள் உட்பட 85 நூல்களை வெளியிட்டிருக்கும் முனைவர் உசேனுடன் கலந்துரையாடவும் வாய்ப்பளிக்கிறது இம்மாத நிகழ்ச்சி.
கவிஞர் நல்லாணின் நூல் அறிமுகம் அங்கமும் உண்டு.
‘எழுத்தறிவித்தவர்’ எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம், பரிசளிப்பு என வழக்கமான அங்கங்களும் இடம்பெறும்.
நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 28) மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறும்.

