தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கியட் ஹாங் சமூக மன்றத்தில் பட்டிமன்றம்

1 mins read
b6d94ad2-d511-4fbf-a5eb-dd1337385d5e
புலவர் மா. இராமலிங்கம் பட்டிமன்றத்தின் நடுவராகச் செயல்படுவார்.  - படம்: ஊடகம்

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு கியட் ஹாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஒரு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்காலத் தலைமுறையினர்க்குத் தமிழ்மொழியை உயிர்ப்புடன், துடிப்பாக அர்த்தமுள்ளதாக வைத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தேவை வீரமா? விவேகமா?’ என்ற தலைப்பில் அப்பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

புலவர் மா. இராமலிங்கம் பட்டிமன்றத்தின் நடுவராகச் செயல்படுவார்.

‘வீரமே’ என்ற அணிக்காக திரு சாம்ஸ் (நடிகர்), முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு ஸ்டாலின் போஸ் ஆகியோரும், ‘விவேகமே’ என்ற அணிக்காக விவேகமே! என்ற அணியில் செல்வி மதுமிதா (நடிகை), மன்னை க. இராஜகோபாலன், திருமதி அகிலா முத்து ஆகியோரும் வாதிடவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 7.30 மணிவரை, கியட் ஹாங் சமூக மன்றத்தின் ஐந்தாம் தளத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம் $8.

தொடர்புக்கு: சாகுல் ஹமீது (9018 3786), தலைவர், கியட் ஹாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.

குறிப்புச் சொற்கள்