தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
உடற்பயிற்சி குறித்த தயக்கத்தையும் சோம்பலையும் நாம் எப்பாடுபட்டாவது அகற்றவேண்டும். உடற்பயிற்சியைத் தவிர்ப்பதால் மூளையின் ஆரோக்கியம் கெடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மூளை சிறப்பாகச் செயல்பட உடற்பயிற்சி அவசியம், அவசரம்

2 mins read
54753493-5221-4b7a-b2a1-30743741cdaf
ரத்த நாளங்களுக்கு எவை நல்லதோ அவை மூளைக்கும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.  - படம்: பிக்சாபே

ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் இடையே தொடர்பு உள்ளது.

சுவீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்டியூடெட் (Karolinska Institutet) ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்தனர்.

எழுபது வயக்கு மேற்பட்ட 700க்கும் அதிகமானோரின் மூளை குறித்த பரிசோதனைப் படங்களை ஆய்வு செய்ததன் மூலம், வாழ்வியல் சார்ந்த நம் முடிவுகள், மூளையின் மூப்படைதல் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

‘அல்ஸைமர்ஸ் அண்ட் டிமென்ஷியா’ சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளுடன், மூளையை இளமையாக வைத்திருப்பதற்கான குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ரத்த நாளங்களைப் பேணுதல் அவசியம்

மூப்படைந்த மூளைக்கும் ரத்த நாளங்களின் ஆரோக்கியம் குறைவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

நீரிழிவு, பக்கவாதம், சிறிய நாள நோய் (cerebral small vessel disease), அழற்சி போன்றவை முடக்கப்பட்ட மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டது.

உடற்பயிற்சி செய்பவர்களின் மூளை, இளம் வயதினரைப் போல் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரத்த நாளங்களுக்கு எவை நல்லதோ அவை மூளைக்கும் நல்லது என்றனர் ஆய்வாளர்கள். “ரத்தத்தின் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையைக் கட்டுப்படியான அளவில் வைத்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பதற்கு முக்கியம்,” என்று தலைமை ஆய்வாளர் அன்னா மார்செகிலா கூறியுள்ளார்.

மூளை ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க வழிகள்

உடற்பயிற்சி செய்வது மூளை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதனை மூலம் கவனித்துக்கொள்ளுங்கள்.

பழங்கள், காய்கறிகள், ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் அழற்சி ஏற்படும் சாத்தியம் குறையும்.

மூளைக்கு வேலை தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சமூக உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதும் மூளை செயல்பாட்டுக்கு நல்லது.

குறிப்புச் சொற்கள்