தனிப்பட்ட உதவியாளர்போல செயல்படும் நோக்கில் வடி[Ϟ]வமைக்கப்பட்டுள்ள கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘ஜெமினாய்’, தமிழ் உள்பட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் விரிவாக்கம் கண்டுள்ளது.
மின்னஞ்சல் எழுதுவதில் தொடங்கி, இலக்கணப் பிழைத் திருத்தம், சந்தேகங்களைக் கேட்டறிதல், அலுவலகச் சந்திப்புக்குத் தயார் செய்தல் எனப் பல அன்றாடப் பணிகளுக்கு இந்த மெய்நிகர் உதவியை நாடுவது பலருக்கு வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், அந்த அனு[Ϟ]பவங்களை எளிதாக்கும், மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தியுள்ளது கூகல் நிறுவனம்.
பல மொழிகளைப் புரிந்துகொள்வதுடன், அந்த மொழி[Ϟ]களில் உரையாடவும் ‘ஜெமினாய் லைவ்’ சேவை வழங்குகிறது. பிடித்த மொழியில் நண்பருடன் உரையாடுவது போன்ற உணர்வை இது தரும் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.
இதனை கூகல், ஆண்டராய்ட் திறன்பேசிகளில் பயன்படுத்தலாம்.
‘ஜெமினாய் லைவ்’வை ஒரே நேரத்தில் இரு மொழிகளில் பயன்படுத்த இயலும்.
இதில் உரையாடல்களை எளிதாகத் தொடங்கவும் முடிக்கவும் தேவைப்படும்போது இடைநிறுத்தம் செய்யும் வசதியும் உள்ளது.
சாதாரண உரையாடல் தொடங்கி, மருத்துவச் சந்திப்புகள், நுழைவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்தல், பணிகளை முக்கியத்துவத்திற்கேற்ப ஒழுங்கு[Ϟ]படுத்துதல், வேலை தேடுதல், திறன் மேம்பாட்டு ஆலோசனை பெறுதல், முக்கிய யோசனைகள் குறித்த ஆலோசனை உள்ளிட்ட பல நுணுக்கமான உதவிகளை மேம்படுத்தப்பட்ட ஜெமினாய் மெய்நிகர் தளத்தில் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
சில சிக்கலான பணிகளையும் செய்து முடிக்கும் வண்ணம் ‘ஜெமினாய்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ‘ஜி மெயில்’ தளத்திலிருக்கும் ஒரு உணவுச் செய்முறையைப் படித்து, அதற்குத் தேவையான பொருள்களை, ‘கீப்’ குறிப்பேட்டுச் செயலியில் எழுதுவது, ஒரு நிகழ்வின் விளம்பரப் படத்தைப் பதிவேற்றி அன்றைய நாளின் பணிகளைப் பார்த்து அதற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்ய பயனர்கள் தங்களுக்கு வசதியான மொழியில் கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும்.