மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களும் அப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
பாலர் பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் கதை சொல்லும் போட்டியிலும் சொற்களைக் கண்டுபிடிக்கும் போட்டியிலும் பங்கேற்கலாம்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் 16 வயதிற்கு மேற்பட்ட பொதுப் பிரிவினர்க்கும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் போட்டிகளில் கலந்துகொள்ளப் பதிவுசெய்யவும் https://tinyurl.com/MKM-2025 எனும் இணையத்தளத்தை நாடலாம்.
மேல்விவரங்களுக்கு: புவனேஸ்வரி - 96225341, A.R. விவேக் - 91691655