முதிர்ச்சியடையும் சிங்கப்பூர்- இந்தியா பங்காளித்துவம்

2 mins read
2ee1db27-bf00-4501-b9cf-b6de9559269b
(முன், இடது) வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணனும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்‌சங்கரும் இம்மாதம் 4ஆம் தேதி இணக்குக் குறிப்பு செய்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் இந்தியாவும் அரசதந்திர உறவின் வைரவிழாவைக் கொண்டாடுவது அவற்றின் முன்னோக்கிய பார்வைக்கும் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய ஆட்சிமுறைக்கும் சிறந்த சான்றாக இருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பின் கடந்துசென்ற பதற்றத்தையும் மாறிவரும் அனைத்துலக சூழலால் ஏற்பட்ட நெருக்கடியையும் தாண்டி சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஆசியாவின் ஆக முக்கிய, பன்முகத்தன்மை கொண்ட உறவாக வளர்ந்துள்ளது.

சிங்கப்பூர்- இந்திய உறவு வட்டார ரீதியான நிலைத்தன்மைக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் வளரும் ஆசிய யுகத்தின் செழிப்புக்கு ஆற்றலாகவும் திகழ்கிறது.

1990களில் இந்தியா அதன் பொருளியலைத் தாராளமயமாக்கியது ஒரு முக்கிய திருப்புமுனை. புதுப்பிக்கப்பட்ட, அரவணைக்கும் போக்குடன் இருந்த இந்தியா முன்வைத்த வாய்ப்பை, வர்த்தகத்துக்கும் நிதிக்கும் பெயர் பெற்ற சிங்கப்பூர் உடனடியாகக் கண்டுகொண்டது.

அந்த இருதரப்பு புரிந்துணர்வு புதிய கட்டமைப்பாக உருவெடுத்தது. இந்தியா-சிங்கப்பூர் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிகா) பிறந்தது. சாதாரண வர்த்தக உடன்பாட்டையும் தாண்டி பொருள்கள், சேவைகள், முதலீடுகள், நிதிப் பரிவர்த்தனை ஆகிய பல அம்சங்களையும் சிகா கொண்டிருந்தது.

இந்தியாவின் அனைத்துலக வர்த்தக உடன்பாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருதரப்பு உறவின் உந்துசக்தியாகவும் சிகா திகழ்ந்தது.

இன்று, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $35 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் ஆகப் பெரிய வர்த்தக, முதலீட்டுப் பங்காளியாக சிங்கப்பூர் உள்ளது.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பங்காளித்துவம் மூன்று துடிப்புமிக்க அம்சங்களில் செயல்படுகிறது. பொருளியல், தற்காப்பு, மின்னிலக்கமயமாதல்.

பொருளியல் ரீதியாக வழக்கமாக வர்த்தகத்தைத் தாண்டி சிங்கப்பூரும் இந்தியாவும் கைகோத்துள்ளன.

சிங்கப்பூரின் இறையாண்மை சொத்து அமைப்புகளான சிங்கப்பூர் அரசாங்கத்தின் முதலீட்டு கூட்டமைப்பு, தெமாசெக் ஆகியவை இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், இயற்கை எரிசக்தி ஆகிய துறைகளில் நீண்டகால முதலீட்டு பங்காளிகளாக இருக்கின்றன.

இந்தியாவில் தொடங்கப்படும் புதிய தொழில்கள் சிங்கப்பூரின் நிலையான சட்டக் கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றன. அனைத்துலக அளவிலும் கால் பதிக்க சிங்கப்பூரிலும் அவை முதலீடு செய்கின்றன.

சிங்கப்பூர் நிறுவனங்களும் இந்தியாவின் பரந்த சந்தையில் கால் பதித்து கொட்டிக்கிடக்கும் மின்னிலக்கத் திறனாளர்களைப் பயன்படுத்துகிறது.

எதிர்காலத்தில் இந்தப் பங்காளித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் எனும்போது சவால்கள் இல்லாமல் இருக்காது. ஆனால், முன்பிருக்கும் வாய்ப்புகள் ஏராளம், வரலாற்றில் தடம் பதிக்கக்கூடியவை.

திறன் வளர்ச்சி, பசுமைப் பொருளியல், மின்னிலக்க இணைப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடும் இந்தியா- சிங்கப்பூர் அமைச்சர்களுக்கான வட்டமேசை மாநாடு காலத்திற்கு ஏற்ற நிகழ்வுகள்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இந்தியாஅரசதந்திர உறவு