தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025ஆம் ஆண்டின் நிறம் ‘மோக்‌கா மூஸ்’

2 mins read
d27cd532-e154-49d3-9dea-a7a67e3ae5ef
‘மோக்‌கா மூஸ்’ பழுப்பு நிறம், காண்போருக்‌கு ஒருவிதமான ஆறுதலையும் இன்பத்தையும் வழங்குவதாக பான்டோன் நிறுவனம் சொன்னது. - படம்: இணையம்
multi-img1 of 2

‘மோக்‌கா மூஸ்’ (Mocha Mousse - 17-1230) என்ற ஒருவகையான பழுப்பு நிறத்தை 2025ஆம் ஆண்டிற்கான நிறமாக பான்டோன் (Pantone) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பழுப்பு நிறம், காண்போருக்‌கு ஒருவிதமான ஆறுதலையும் இன்பத்தையும் வழங்குவதாகவும், சாக்லெட், காப்பி முதலிய சுவையான பழுப்பு நிற உணவு வகைகளிலிருந்து ஊக்கம் பெற்றதாகவும் அது தெரிவித்துள்ளது.

அதிநவீன, பல்துறை நிறமான இந்த ‘மோக்‌கா மூஸ்’, சாதாரண பழுப்பு நிறத்தின் அழகை மேலும் உயர்த்தி, ஓர் ஆடம்பரமான உணர்வை உருவாக்‌குவதாகக் கருதப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், பான்டோன் வண்ணக் கழகம் அனைத்துலக சூழலுக்‌கேற்ப ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து, கலாசாரத்துடன் வண்ணங்களின் தொடர்பைப் பற்றிய உரையாடல்களை தொடர்ந்து உருவாக்‌கி வருகிறது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக செய்யப்பட்டுவரும் இந்த வருடாந்தர அறிவிப்பு, ஃபேஷன் முதல் வீட்டு அலங்காரம் வரை பல்வேறு துறைகளில் காணப்படும் போக்குகளை மாற்றியமைத்துள்ளது.

மேலும், மோட்டரோலா (Motorola), ஜாய்பேர்ட் (Joybird) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ‘மோக்‌கா மூஸ்’ நிறத்தில் அவற்றின் தயாரிப்புகளை வெளியிட பான்டோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

‘மோக்‌கா மூஸ்’ நிறம் தனிப்பட்ட நலனை மேம்படுத்த விரும்புவோருடன் அதிகம் ஒத்துப்போகும் எனக் கூறப்படுகிறது. அதன் மண்சார்ந்த நேர்த்தியானது, இனிப்புப் பண்டங்களைச் சுவைப்பது அல்லது இயற்கையுடன் மீண்டும் இணைவது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது.

2024ல் ‘பீச் ஃபஸ்’ (Peach Fuzz), 2023ல் ‘விவா மெஜென்டா’ (Viva Magenta) போன்ற பல்வேறு நிறங்களை பான்டோன் நிறுவனம் அண்மைய ஆண்டுகளில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்