சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) பிற்பகல் 4.00 மணிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமாஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
எழுத்தாளர் நா ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள பன்னிரெண்டு சிறுகதைகளும் இந்தியாவின் தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா ஆகிய மூன்று நாட்டுச்சூழலை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளன.
திருவாட்டி இசக்கி செல்வி நூலை அறிமுகம் செய்து பேசுவார். திருவாட்டி மஹ்ஜெபீன், நூல் குறித்து எழுத்தாளர் நா. ஆண்டியப்பனுடன் கலந்துரையாடுவார்.
நிகழ்ச்சியில், போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினரான சௌமியா திருமேனி நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்படுவார்.
டிசம்பர் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்பவேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் டிசம்பர் மாதச் சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“இப்படி நடப்பதற்கு யார் காரணம் என எனக்குத் தெரியாதா என்ன?” ஆவேசமாகச் சொன்னான் வாசு.
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
“அது நான் இல்லை... இல்லை... இல்லை...!” ரமணியின் குரலில் கட்டடமே அதிர்ந்தது.
பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுதவேண்டும்.
கதவைத் திறப்பதா வேண்டாமா என்ற குழப்பம் அரும்ப, உடல் வெடவெடத்தது.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 22/11/2024 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பிவைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம். அல்லது 81420220 என்ற எண்ணில் பிரதீபா வீரபாண்டியனையோ 91696996 என்ற எண்ணில் பிரேமா மகாலிங்கத்தையோ தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

