அப்துல் கலாம் இலட்சியக் கழகத்திற்குப் புதிய செயலவை நியமிக்கப்பட்டுள்ளது.
அக்கழகத்தின் ஏழாம் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) மேக்ஸ்வெல் சாலையில் அமைந்திருக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, அவ்வளாகத்திலுள்ள இன, சமய நல்லிணக்கக் கண்காட்சியை உறுப்பினர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் முதல் தலைவராக இருந்த திரு கேசவபாணி, முன்னாள் தலைவர் திரு அமீரலி ஆகியோரின் உன்னத சேவையை உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டினர்.
தொடர்ந்து சென்ற ஆண்டு வாழ்நாள் சாதனை விருது பெற்ற புதுமைத்தேனீ அன்பழகனின் சேவை போற்றப்பட்டது.
இறுதியாக, திரு பெருமாள் அருமைச்சந்திரனைத் தலைவராகப் புதிய செயலவை பொறுப்பேற்றுக்கொண்டது.

