புத்தக வாசிப்பு அனுபவத்துடன் அறச்செயலுக்கும் வழிவகுக்கும் ‘ரீட் ஃபார் புக்ஸ்’ எனும் வாசிப்பு தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறவுள்ளது.
லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமைச் சங்கம் (லிஷா), லிஷா இலக்கிய மன்றம், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அகியன இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் நூலகத்திலிருந்து தாங்கள் விரும்பும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பத்துப் பங்கேற்பாளர்கள் 15 நிமிடங்களுக்குப் புத்தகம் வாசித்தால், உதவி தேவைப்படும் ஒருவருக்கு ஒரு புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர் சுமதி சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சி, தேசிய நூல வாரியக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் நடைபெறும்.
பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வந்து, வாசிக்க விரும்பும் தமிழ்ப் புத்தகங்களை தேசிய நூலகத்திலிருந்து உறுப்பினர் அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலிருந்தும் தமிழ்ப் புத்தகங்களை கொண்டுவந்து வாசிக்கலாம்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புத்தகம் வாசிக்கும் மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த வலைப்படிவத்தில் முன்பதிவு செய்யலாம். https://forms.gle/pEBqgS5fANgbS2Ra8