ஓய்வுபெற்ற மூத்த தமிழாசிரியரும் எழுத் தாளருமான திரு பொன் சுந்தரராசு எழுதிய ‘ஒளி’ எனும் தலைப்பிலான நூலின் வெளி யீட்டு விழா செப்டம்பர் 28ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சி தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 5ஆம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கல்வி அமைச்சின் தமிழ் வளர்ச்சிக் குழுவினரும் லீ குவான் யூ இருமொழிக்கொள்கை நிதிக் குழுவினரும் இந்த நூலுக்கு நிதி ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்நூல் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் எளிய தமிழில் தமிழ் ஆசிரியர்களையும், பள்ளி மாணவர்களையும் அவர்களின் இளம் பெற்றோரின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு புனையப்பட்டு உள்ளது. ஜிவஜோதி அச்சகத்தின் தி. ஜோதிநாதன் வரவேற்புரை ஆற்றுவார்.
தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையுரையையும், திருமதி அனுராதா வெங்கடேஸ்வரன் வாசகர் உரையையும் ஆற்றுவார்கள். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர்கனி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் முதல் நூலைப் பெறுவார். அவரோடு, 15 பிரமுகர்கள் மேடையில் நூலைப் பெறுவார்கள்.
முனைவர் த. வேணுகோபால் வாழ்த்துரை ஆற்றுவார்.
உங்கள் வருகையை உறுதிசெய்ய, திரு ஜோதிநாதனை 81183430 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.