பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களம் அமைப்பு பாவேந்தர் 135 சுழலும் சொற்போர் இலக்கிய விழாவை இம்மாதம் 20ஆம் தேதி நடத்தியது
தமிழ்நாட்டு அரசு பாவேந்தர் விருதாளர், தமிழ் இணையக் கல்விக் கழக மதியுரைஞர் திரு புலவர் செந்தலை ந. கவுதமன் தமிழின் முக்கியத்துவம், மகத்துவம் பற்றி சிறப்புரை வழங்கி, சூழலும் சொற்போரைத் தொடங்கி வைத்தார்.
பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு காப்பியத்தில் பெரிதும் வலியுறுத்தப்படுவது பெண்ணின் பெருமையே என்று செல்வி சுவேதாவும், சமூக விழிப்புணர்வே என்று திருமதி சுவர்ணலதா ஆவுடையப்பனும், குடும்ப பிணைப்பே என்று வானதி பிரகாஷும் உரையாற்றினார்கள்.
தேசிய நூலக வாரிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் அ.கி.வரதராஜனுக்கு இந்த ஆண்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நோக்க உரை வழங்கிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன், அடுத்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளை மையமாகக் கொண்டு மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
செய்தி: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்