தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுருள்முடிக்குள் ஒளிந்துள்ள அறிவியல்

2 mins read
7a67f11e-8fb3-43b9-91d9-d82cd0eb7fb7
ஹாலிவுட் நடிகர் திமத்தி செலமெட்டின் அழகிய சுருள்முடியை வடிவமைப்பது அமினோ அமிலங்களுக்கு இடையிலான இணைப்புகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

தலைமுடி நேராகவோ அலைபோல வளைவாகவோ அமைவதற்கு மரபணுக்கள் மட்டுமே காரணமல்ல. அறிவியலுக்கும் அதில் தொடர்பிருக்கிறது.

சுருள்முடி ஆண், பெண் என இருபாலருக்குமே அழகுசேர்க்கும் எனத் தமிழர்கள் கருதி வந்தனர். சுருண்ட கூந்தலைக் ‘குண்டல கேசம்’ என்று நம் பழைய காவியங்கள் வர்ணிக்கின்றன. மனிதமுடி மட்டுமன்றி, ஒட்டுமொத்த விலங்கினத்தின் முடி வகைகளின் பன்முகத்தன்மையும் விரிவடைந்துள்ளதாக ‘பிக்திங் ‘அறிவியல் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

‘கெரட்டின்’ என்ற புரதத்தாலான தலைமுடியின் அமைப்பை, புரதத்தினுள் அடங்கியுள்ள அமினோ அமிலங்களுடனான பிணைப்புகள் தீர்மானிக்கின்றன.

அமினோ அமிலங்களில், குறிப்பாக சிஸ்டீன் (cysteine) என்ற அமிலத்திற்கு இடையேயுள்ள இணைப்புகள் தலைமுடி எப்படிச் சுருள்கின்றது என்பதை முடிவுசெய்யும். ‘டைசல்ஃபைட் லிங்க்கேஜஸ்’ (disulfide linkages) என அழைக்கப்படும் இவ்வகை இணைப்புகளை முடியை நேராக்கும் (hair straightening) முறைகள் முறியடிக்கின்றன. முடியை மேலும் அடர்த்தியாக்குவதற்கான முறையிலும் இந்த இணைப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.

புரதத்தை வலுப்படுத்த வழிகள்

முடி வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் கெரட்டின் புரதம் அவசியம். சூரிய வெப்பம், சுற்றுப்புறத் தூய்மைக்கேடு, தலைமுடிக்கு ஒவ்வாத ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் கெரட்டினின் தரம் பாதிப்படையக்கூடும்.

சிலருக்கு இயற்கையாகவே கெரட்டின் குறைவாக இருக்கும். தலைமுடிக்கு நல்ல தாதுப்பொருள்கள் உள்ள திரவங்கள், லேகியங்கள், பசைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் கெரட்டின் அளவு சீராகலாம். இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அத்துடன், சில வகை உணவுப் பொருள்களும் தலைமுடிக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி ஆகியவை கெரட்டின் புரத உருவாக்கத்திற்கு உதவும். முட்டை, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கொண்டைக்கடலை, வெங்காயம், பூண்டு, கேரட் போன்ற உணவு வகைகளும் உதவும்.

குறிப்புச் சொற்கள்