இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவையொட்டி சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், பொற்கனல் 2025 போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இளையர்களின் புத்தாக்கச் சிந்தனைகளோடு பங்கேற்பாளர்கள் சமூக நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்கி, அவற்றைச் சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்நிகழ்ச்சி வாய்ப்பளிக்கிறது.
மேலும், நிகழ்ச்சிக்குப் பிறகு, போட்டியாளர்களின் சிந்தனைகளைச் செயல்படுத்த வேண்டிய உத்திகள் குறித்து வழிகாட்டுதலை வழங்குவதற்காக ஒரு தனி அமர்விற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆறு குழுக்களில் ஏறத்தாழ 35 போட்டியாளர்கள் பங்குபெற உள்ளனர். அவர்கள் சமூகம், பண்பாடு, தொழில்நுட்பம், தலைமைத்துவம், தனிமனித மேம்பாடு ஆகிய தலைப்புகளை ஒட்டி தங்கள் படைப்புகளை முன்வைப்பர். திருவாட்டி ஜெயசுதா சமுத்திரன், திருவாட்டி ராணி கண்ணா, திரு வீரப்பன் சுவாமிநாதன், திரு பழனியப்பன் முத்துராமன் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாகச் செயல்படுவர்.
நிகழ்ச்சி ஏப்ரல் 19 ஆம் தேதி சனிக்கிழமை தேசிய நூலகத்தின் ‘தி பாட்’ அரங்கில் பிற்பகல் 2 முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியைக் காண விரும்புவோர் tinyurl.com/Porkanal2025 என்ற இணையப் பக்கம் மூலம் நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்து கொள்ளலாம்.