அராப் ஸ்திரீட்டில் சனிக்கிழமை (மார்ச் 8), மனஅழுத்தம், பதற்றம் உள்ளிட்டவற்றைப் போக்கி அமைதி ஏற்படுத்தும் நோக்கில் ‘பிராணாயாமம்’ எனும் ஒரு வகை மூச்சுப்பயிற்சியைக் கற்றுத்தரும் பயிலரங்கு நடைபெறவுள்ளது.
13 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம்.
கடந்த 25 ஆண்டுகளாக உடற்பயிற்சி, மனஅமைதிக்கான பயிற்சிகளை உள்ளடக்கிய முழுமையான (Holistic) பயிற்சி ஆலோசனைகளை வழங்கிவரும் சரவணன் கோவிந்தசாமி, இந்தியாவிலிருந்து வரவுள்ள ஆசான் யோகி தர்மராஜ் இருவரும் இப்பயிலரங்கை வழிநடத்தவுள்ளனர்.
யோகப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சிகள் வழங்குவதிலும் நிபுணத்துவம் பெற்றவரும் ‘காட்ஸ் வாரியர்’ எனும் யோகா, தற்காப்புக் கலைகளுக்கான பள்ளியை நடத்துபவருமான ஆசான் யோகி தர்மராஜ் செய்முறை விளக்கம் வழங்கவுள்ளார்.
சரவணன் வழங்கும் 20 நிமிட ஆலோசனை அமர்வு, ஆசான் தர்மராஜுடன் 45 நிமிட மூச்சுப் பயிற்சி, 20 நிமிடக் கேள்வி பதில் அமர்வு ஆகியவை இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.
மெய்ப் பாடம், பாலர் பாடம், காலைப் பாடம் என அனைவரும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய பாரம்பரிய முறை உடற்பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்கவுள்ளோம்,” என்றார் உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளரான சரவணன், 47.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணி, மாலை 4 மணி என இருமுறை நடைபெறும் பயிலரங்கில் சேர 9852 5309 என்ற தொலைபேசி எண்ணில் சரவணன் கோவிந்தசாமியைத் தொடர்பு கொள்ளலாம்.