சிறப்பான வாடிக்கையாளர் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உன்னத சேவை விருதை வென்றுள்ளது.
நிறுவனங்களுக்கு வர்த்தகம், நிதி, வரவுசெலவு கணக்கு விவரங்கள் தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட சேவைகளைச் சிறப்பாக வழங்கிவரும் ‘ராயல் கிங்ஸ் குழுமம்’, இவ்விருதை 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பெற்று வருகிறது.
மேலும், இக்குழுமத்தின் மூத்த வர்த்தக மேம்பாட்டு மேலாளரான திரு முகம்மது ஹாரிஸ் கேரி, இயக்குநர் திருவாட்டி வால்பெரெஸ் ஜாய் டெல்கடோ ஆகியோர் ‘தலைசிறந்த நட்சத்திர விருதை’ வென்றனர்.
சிங்கப்பூர் ஹோட்டல் சங்கம் வழங்கிய இவ்விருதுகள், சிறந்த தரமான சேவையை வழங்குவோரை அங்கீகரிக்கும் இலக்குடன் நிறுவப்பட்டது. இவ்விருதுகள் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
விருது குறித்து தமிழ் முரசிடம் பேசிய ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான திரு சிராஜுதீன் சையது முகமது, “வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சவால்களைக் களைந்து அவர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதில் குழுமம் தொடர்ந்து உறுதிசெய்யும்.
“இவ்விருது வாடிக்கையாளர்களுக்கு மேன்மேலும் நல்ல முறையில் தரமான, நம்பகமான சேவையை வழங்க எங்களை ஊக்குவிக்கிறது,” என்று கூறினார்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்புமிக்க இவ்விருதுகள் வாடிக்கையாளர்களுக்கு மேலான சேவைகளை நல்கிடும் சேவையாளர்களை உருவாக்குவதற்கும் ஊக்கமளிப்பதற்கும் ஆதரவும் அங்கீகாரமும் அளிக்கின்றன.


