கவிமாலை அமைப்பு, சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பை நடத்திவருகிறது.
அதன் 294வது சந்திப்பு சனிக்கிழமை (நவம்பர் 30) மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5, பாசிபிலிட்டி அறையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் மு.செ.பிரகாஷ், அஷ்ரப், தீபக் ஆகியோர் தங்களுக்குப் பிடித்த கவிதை நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறார்கள்.
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, ‘அமெரிக்கா கிழக்கில் தமிழ்’ என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.
மொரிஷியஸ் தீவில் தமிழும் கவிதையும் என்ற தலைப்பில் மா. அன்பழகன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்.
மாணவி தேவேந்திரன் சஹானா வழிநடத்தும் இந்நிகழ்ச்சியில், ‘நிலந்தொடும் மழை’ எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம், பரிசளிப்பு ஆகிய அங்கங்கள் இடம்பெறவிருக்கின்றன.
படித்ததில் பிடித்தது அங்கத்தில், பங்கேற்பாளர்கள் தாங்கள் வாசித்த கவிதை குறித்துப் பகிர்ந்துகொள்வர்.
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். மேல்விவரங்களுக்கு 9060 4464 என்ற தொலைபேசி எண்ணில் லலிதாவைத் தொடர்புகொள்ளலாம்.

