கவிமாலை அமைப்பு, சனிக்கிழமை (அக்டோபர் 5) அதன் 25 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது.
அதை முன்னிட்டு ‘கவிமாலை வெள்ளி விழா இரவு விருந்து’ என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் பரதநாட்டிய கலாநிதி, பத்மஸ்ரீ ஆகிய பட்டங்களைப் பெற்ற முனைவர் நர்த்தகி நடராஜ் வழங்கும் ‘அபூர்வத்தின் நடனம்’ என்ற சிறப்பு நாட்டிய அங்கம் இடம் பெறவிருக்கிறது.
வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மூத்தோர் 25 பேருக்குச் சிறப்பு செய்யப்படும் என்றும் அதிர்ஷ்டக் குலுக்கலில் ‘டெல்’ (DELL) மடிக்கணினி, ‘சம்சுங்’ (Samsung) கைப்பேசி போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண் 2, ஆலன்பி ரோட்டில் உள்ள ஃபுட்சிங் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம்.
மேல் விவரங்களுக்கு 9005 3043 / 98536465 / 91461400 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

