ரெட்டினாய்டுகள் போன்ற முகப் பராமரிப்பு பொருள்கள் சருமத்தைப் புத்துணர்ச்சியடையச் செய்து வயதாகும் அறிகுறிகளைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தத் தோல் பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்துவது சருமத் தடையை சேதப்படுத்தி, எரிச்சலையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
இந்த நிலையைத் தடுக்க, அண்மையில் ‘ஸ்கின் சைக்கிளிங்’ வழிமுறை அறிமுகம் கண்டது.
ரெட்டினோல், ஹைட்ராக்ஸி அமிலங்கள் போன்ற மேற்பூச்சு பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தடுத்து இரவுகளில் தோல் பராமரிப்புப் பொருள்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதை இந்த வழிமுறை ஊக்குவிக்கிறது.
‘ஸ்கின் சைக்கிளிங்’ முறைக்கு மென்மையான முக சுத்திகரிப்பான் (cleanser), வேதிப் பொறை நீக்கி, ரெட்டினோல் அல்லது ரெட்டினாய்டு, மாய்ஸ்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் தேவை.
‘ஸ்கின் சைக்கிளிங்’ முறை வழக்கமாக நான்கு இரவுகளுக்குச் செய்யப்பட வேண்டும். முடிந்ததும் அடுத்த நான்கு நாள்களுக்கு மீண்டும் செய்யவும்.
சருமப் பிரச்சினைகள் உள்ளவர்கள் முதலில் ஒரு தோல் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
‘ஸ்கின் சைக்கிளிங்’ முறையைத் தொடர்ந்து செய்வதால் சரும எரிச்சல் குறைந்து சருமத்திற்கு ஓய்வு கிடைக்கிறது.
சருமப் பராமரிப்புக்கு ‘ஸ்கின் சைக்கிளிங்’ முறை ஒரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறையாக இருப்பினும், பயன்படுத்தும் பொருள்கள் ஏற்றதா என்பதைக் கண்காணிப்பது முக்கியம்.
கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ரெட்டினாய்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
சருமப் பராமரிப்பில் ‘ஸ்கின் சைக்கிளிங்’ வழிமுறை ஒரு புதிய தொடக்கம். எந்தவொரு புதிய தோல் பராமரிப்பு வழக்கத்தையும் தொடங்குவதற்குமுன் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

