புத்தகத்தைப் போல மூடியும் திறந்தும் வைத்துக்கொள்ளும் வகையில் மடக்கு ஐஃபோனை உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. மடக்கு ஐஃபோன் தொடர்பாக எல்ஜி நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மடக்கு ஐஃபோனுக்கு காப்புரிமை கோரி கடந்த 2014ஆம் ஆண்டிலேயே அமெரிக்கக் காப் புரிமை, வர்த்தகச் சின்ன அலு வலகத்திடம் ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்து இருந்ததாகவும் இம்மாதத்தில் காப்புரிமை அளிக் கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. "மின்னணு சாதனத்தை மடித்து வைத்துக்கொள்ளும் விதமாக வளையக்கூடிய ஒரு பகுதி அதில் இருக்கலாம். திரைப் பகுதியை மடிக்கும் விதத்தில் அந்தச் சாதனம் இருக்கும்," என்று ஆப்பிள் நிறுவனம், தனது காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப் படுகிறது.
மடக்கு ஐஃபோன்: ஆப்பிள் நிறுவனத்திற்குக் காப்புரிமை
27 Nov 2017 - 5:50 am
1 mins read
