பிரபலமாகும் பின்னோக்கிய நடைப்பயிற்சி

பிரபலமாகும் பின்னோக்கிய நடைப்பயிற்சி

1 mins read

ஜப்பான் நாட்டில் பழக்கத்தில் இருக்கும் பின்னோக்கிய நடைப் பயிற்சி தற்போது ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றது. பின்னோக்கி ஓடும்போது முழங்காலுக்குக் குறைவான அழுத்தம் கிடைப்பதால், முழங்காலில் ஏற்படும் காயங்களும் கணிசமான அளவில் குறைவதாகவும் கூறப்படுகிறது. சாதாரணமாக ஓடுவதைவிட, பின்னோக்கி ஓடும்போது ஒவ்வொரு அடியின்போதும் பின்புறம் மற்றும் பின்னங்கால் களின் தசைகளை அதிகமாக உபயோகிக்கிறோம். இதனால் அதிகப்படியான ஆற்றலும் முழு கவனமும் தேவைப்படுகிறது. கவனம் ஒரு முகப்படுவதால் ஒருவிதத்தில் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்க முடிகிறது. மற்ற உடற்பயிற்சிகள் செய்யும்போது தொய்வடையும் நேரங்களில் இந்தப் பின்னோக் கிய ஓட்டப்பயிற்சியைத் தொடரலாம்.