சுடச் சுடச் செய்திகள்

கோஜெக்கின் புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை

இந்தோனீசியாவின் வாடகை வாகனச் சேவை செயலியான கோஜெக்,  புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது.  

ஜூலை மாதத்தில் 10 பில்லியன் டாலர் (13.8 பில்லியன் வெள்ளி) செலவில் ‘கோப்ளே’ என்ற அந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் நெட்ஃப்ளிக்ஸ், மலேசியாவின் ஐ-ப்ளிக்ஸ், சிங்கப்பூரின் ஹூக் (Hooq) ஆகியவற்றுடன் மோதுகிறது ‘கோப்ளே’.

2010ஆம் ஆண்டில் வாடகை வாகனச் சேவையாக மட்டுமே தொடங்கப்பட்ட கோஜெக் செயலியை வாடிக்கையாளர்கள் இணையக் கட்டணங்கள், உணவுச் சேவைத் துறை, உடற்பிடிப்பு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தலாம்.