(பிரதோஷ காணொளி) சிங்கப்பூரில் மகாசிவராத்திரி; சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

1 mins read
4839f4af-2134-4fcd-9d20-55c3bd719210
கேலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதோஷ வழிபாட்டு காணொளியை (மேலே) இந்து அறக்கட்டளை வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தது. -

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிங்கப்பூரின் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் இரவு முழுவதும் பூசைகள் செய்யப்படும்.

பக்தர்கள் பலரும் இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடுகளில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாசிவராத்திரிக்கு முந்தைய நாளான இன்று (பிப்ரவரி 21) மாலை சிறப்பு பிரதோஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன.

கேலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதோஷ வழிபாட்டு காணொளியை (மேலே) இந்து அறக்கட்டளை வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தது.

மகாசிவராத்திரியின்போது இரவு முழுவதும் நான்கு கால பூசைகள் நடத்தப்படும்.

முதல் காலம்: இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

இரண்டாம் காலம்: இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

மூன்றாம் காலம்: நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை

நான்காம் காலம்: நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை

#மகாசிவராத்திரி #பிரதோஷம் #சிங்கப்பூர் #ஸ்ரீசிவன்

குறிப்புச் சொற்கள்