நல்லாசிரியர் விருது 2020 விண்ணப்பம்

தமிழ் முரசும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், கல்வி அமைச்சின் ஆதரவுடன் இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’ தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப் படுகின்றது.

நல்லாசிரியர் விருதுக்குத் தகுதிபெறுவோர்:

 தமிழ்மொழியின்பால் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற்பிப்பவராக விளங்க வேண்டும்.

 புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவராகத் திகழ வேண்டும்.

 மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

நல்லாசிரியர் விருதுக்கு முன்மொழியும் வழிமுறை பற்றிய குறிப்புகள்:

 விருதுக்குத் தகுதியானவர் எனத் தாங்கள் கருதும் ஆசிரியரைத் தெரிவுசெய்து, உங்கள் தெரிவுக்கான காரணங்களை விளக்கி எழுதி முன்மொழியும் படிவத்தை நிறைவுசெய்து அனுப்பவும். நீங்கள் பரிந்துரைக்கும் ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு விருதும் ரொக்கமும் வழங்கப்படும்.

 தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு முன்மொழியப்படலாம்.

 மாணவர்கள், பெற்றோர்கள், சக ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளித் தலைவர்கள் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைப் பரிந்துரைத்து முன்மொழியும் படிவங்களை இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கலாம்.

 முன்மொழியும் படிவங்களை அனுப்பி வைக்கவேண்டிய இறுதிநாள் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி.

2002ஆம் ஆண்டு முதல், நல்லாசிரியர் விருது சுமார் 200 தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக புகுமுக நிலையங்களில் கற்பிக்கும் நல்லாசிரியர்களை அங்கீகரித்துள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் ஆறு விருதுகள் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக புகுமுக நிலையங்கள் பிரிவில் வழங்கப்படவிருக்கின்றன.

விருதுகள் பற்றிய விவரங்கள் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும்.

பரிந்துரை செய்யும் படிவங்களை அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tllpc.sg அல்லது www.tamilmurasu.com.sg ஆகிய இணையப் பக்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்க:

தமிழ் ஆங்கிலம்

இணையம் வழியும் உங்கள் பரிந்துரைகளை https://tinyurl.com/TLMITT2020 மற்றும் https://tinyurl.com/ELMITT2020 ஆகிய முகவரி வழியாகவும் சமர்ப்பிக்கலாம்.

நல்லாசிரியர் விருதைத் தவிர, 2013 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய கல்விக் கழகத்தின் சிறப்பு பயிற்சி ஆசிரியர் விருது, 2002ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய மேலும் இரு விருதுகளும் நிகழ்ச்சியன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!