கொவிட்-19: நேரலையில் ஶ்ரீ மாரியம்மன் ஆலய யாகம்

கொவிட்-19: நேரலையில் ஶ்ரீ மாரியம்மன் ஆலய யாகம்

1 mins read
5e75f3c0-f19b-4cd6-9fc6-508dff3268a7
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் ஶ்ரீ சஹஸ்ர சண்டி மஹா யாகத்தை பக்தரகள் இணையம் வழியாக நேரலையாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம்: இணையம் -

கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆலயங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், சவுத் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் ஶ்ரீ சஹஸ்ர சண்டி மஹா யாகத்தை பக்தரகள் இணையம் வழியாக நேரலையாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை இந்த யாகம் நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பூசைகளை நேரலையில் காணலாம். 29ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பூசைகளை நேரலையில் காணலாம்.

நேரலையைக் காண கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://youtu.be/tKGoU2wxKks

குறிப்புச் சொற்கள்