வெள்ளரிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை அது கொண்டிருக்கிறது.
தேவையானப் பொருள்கள்:
வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
கறுப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 குவளை
செய்முறை:
வெள்ளரிக்காயை தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய சாற்றில் கறுப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி சாறு தயார்.

