சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கம். இரு சமூகநல அமைப்புகளுக்கு தலா 5,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.
1996ல் தொடங்கப்பட்ட அச் சங்கம், பயன்தரத்தக்க பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறது.
இவ்வாண்டு சங்க உறுப்பினர் களிடமிருந்து கிடைத்த பொருளுத வியை சிங்கப்பூர் ஜாமியா அற நிறுவனம், சிங்கப்பூர் முஹம்மதியா இல்லம் ஆகிய இரு அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்து அறப்பணியில் மீண்டும் அது தன்னை நிலைநிறுத்தி உள்ளது.
இம்மாதம் 14ஆம் தேதி கூத்தா நல்லூர் சங்கத்தின் (சிங்கப்பூர்) தலைவரும் மூத்த சமூக அடித் தளத் தலைவருமான திரு அப்துல் அலீம் தலைமையில் முக்கிய நிர்வாகிகளான வருசை ஜஃபருல்லாஹ், முஹம்மது ஹாரீஸ், தாஜுத்தீன், 'ஆடிட்டர்' ஹாஜா மைதீன், டி.எம்.பதுருதீன், ஆதம் ஷாஹுல் ஹமீத், எஸ்.எஸ்.சிராஜுதீன் ஆகியோர் ஜாமியா சிங்கப்பூர் அறநிறு வனம் சென்று கூத்தாநல்லூர் சங்க உறுப்பினர்கள் வழங்கிய ஜகாத் நிதி ஐயாயிரம் வெள்ளிக்கான காசோலையை ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத் தலைவர் டாக்டர் முஹம்மது ஹஸ்பி அபுபக்கரிடம் வழங்கினர். அந்நிகழ்வில் முதன்மை துணைத் தலைவர் டாக்டர் ஹெச். எம். சலீம், பொதுச் செயலார் மற்றும் செயல் அதிகாரி ஜாபர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
அதை முடித்துக்கொண்டு முஹம்மதியா சங்கத்தின் நல்வாழ்வு இல்லத்திற்குச் சென்று அதன் தலைவர் உஸ்தாத் முஹம்மது அஸ்ரி அஸ்மான் மற்றும் திருமதி நிசா ஏ. மஜீத் ஆகியோரிடம் ஜகாத் நிதி ஐயாயிரம் வெள்ளிக்கான காசோலையை வழங்கி கூத்தாநல்லூர் சங்கத்தினர் மன நிறைவும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
"இந்த இரண்டு சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு கற்றல் பயணமாக இருந்ததாகவும் வசதி குறைந்தவர்களுக்கு ஜாமியா உணவு வங்கி எவ்வாறு உலர் உணவுகளை வழங்குகிறது, முஹம் மதியாவில் சிரமமான குடும்பங் களைச் சேர்ந்த சிறுவர்கள் எவ்வாறு கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் கல்வி, வாழ்க்கைத் திறன்கள், இஸ்லாமிய நெறிகள் எவ்வாறு கற்றுக் கொடுக்கப்படுகின்றன போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த இரு சந்திப்புகளும் உதவியது," என்றார் அப்துல் அலீம்.

