முதலைக்கறி வேண்டுமா? இந்த சிங்கப்பூர் உணவகங்களில் சுவைத்துப்பார்க்கலாம்

முதலைக்கறி வேண்டுமா? இந்த சிங்கப்பூர் உணவகங்களில் சுவைத்துப்பார்க்கலாம்

1 mins read
990d6752-66be-4e50-9c34-3867c8d1ac4b
பீப்பள்ஸ் டேபல் டேல்ஸ் (People Table Tales) உணவகத்தின் முதலை ரிப் ரெண்டாங் கறி. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

முதலைக்கறி சுவைக்க ஆசையா? கவலையை விடுங்கள். சிங்கப்பூரின் இரு உணவகங்கள் உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்ற ஆசையில் முதலைக்கறி வழங்கத் தொடங்கியுள்ளன.

பீப்பள்ஸ் டேபல் டேல்ஸ் (People Table Tales) மற்றும் மைசன் ஷுகோ(Maison Shuko) எனும் அந்த இரு உணவகங்களில் முதலைக்கறி கிடைக்கிறது.

இரு உணவகங்களுமே சிங்ப்பூரின் கிராஞ்சியில் உள்ள லொங் குவாங் முதலைப்பண்ணையிலிருந்து முதலை மாமிசத்தைப் பெறுகின்றன. அங்கு முதலைகள் அவற்றின் தோலுக்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. ஒரு சில சீன உணவகங்கள் மட்டுமே முதலை மாமிசம் பயன்படுத்துகின்றன.

பீப்பள்ஸ் டேபல் டேல்ஸ் உணவகத்தில் முதலை மாமிசம் ரெண்டாங் பாணியில் கிடைக்கிறது, மேலும் வால் பகுதி அப்பளம் போன்ற உணவாகவும் கிடைக்கிறது. மைசொன் ஷுகோ உணவகத்தில் வால் பகுதி இடிக்கப்பட்டு மென்மையான பிறகு சமைக்கப்படுகிறது. இரு உணவகங்களிலும் முதலைக்கறியுடன் உள்ளூரில் உற்பத்தியாகும் மீன், தவளை, காய்கறிகள், காளான்களும் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கும் நோக்கில் கழிவுகள் இல்லாமல் சமையல் செய்வதையும் ஊக்குவிப்பதை எண்ணி இரு உணவகங்களின் முதலாளிகளும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

02-20, 79 சேய் யுன் சாலையில் அமைந்துள்ளது பீப்பள்ஸ் டேபல் டேல்ஸ் உணவகம். மைசன் ஷுகோ உணவகம் 02-02 கிளார்க் கீ, ரிவர் வேலி சாலையில் அமைந்துள்ளது.