மொச்சை பயறின் மகிமை

மொச்சை பயறின் மகிமை

2 mins read
d099a952-222d-4384-ab8d-6453d9da0d4d
-

குளிர்காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் மொச்சை பயறு, குறிப்பாக பொங்கல் சமயங்களில் மொச்சை பயறை விதவிதமாக சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. நாட்டு காய்கறிகளில் முக்கிய இடம்பிடித்துள்ள இதில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.

உடல் தளர்ச்சி நோய்:

'பார்க்­கின்­சன்' எனும் உடல் தளர்ச்சி நோயி­லி­ருந்து மொச்சை பயறு பாது­காக்­கிறது. மொச்சை பய­றில் உள்ள ரச­ாய­னம் நரம்­புக் கடத்­தி­யா­க­வும் செயல்­ப­டு­கிறது. பெரி­ய­வர்­ க­ளுக்கு ஏற்­படும் நரம்­புத் தளர்ச்சி அறி­கு­றி­களை போக்குகிறது. மேலும் உடல் தளர்ச்சி நோய் உள்­ள­வர்­ களுக்கு 'போலேட்' குறை­பாடு இருப்­பது தெரிய வந்­துள்­ளது. எனவே இந்த 'போலேட்' குறை­பாட்டை போக்­க­வும் மொச்சை பயறு உத­வு­கிறது.

​பிறப்­புக் குறை­பாட்டை

தடுக்­கும்:

மொச்சை பயி­றில் உள்ள 'போலேட்' பிறந்த குழந்தை களின் பிறப்­புக் குறைப்­பாட்டை போக்க உத­வு­கிறது. எனவே கர்ப்­பிணி பெண்­கள் இதை எடுத்­துக்­கொள்­வது நல்­லது.

ஒவ்­வொரு நாளும் உங்­க­ளுக்கு 400 எம்.சி.ஜி போலேட் ஊட்­டச்­சத்து தேவைப்படு­கிறது.

இதுவே கர்ப்ப காலத்­தில் 600 எம். சி.ஜி அளவு அதி­க­ரிக் கிறது. கரு­வில் வள­ரும் குழந்தைக­ளுக்கு ஏற்­படும் முது­கெ­லும்பு முழு­மை­யற்ற வளர்ச்சி, மூளை­யின் பகு­தி­களில் ஏற்­படும் முழு­மை­யற்ற வளர்ச்சி போன்ற முக்­கிய பிறப்பு குறைப்­பாட்டை தடுக்க இது உத­வு­கிறது.

​கர்ப்­ப கால பெண்­கள்:

மொச்சை பய­றில் உள்ள 'போலேட்', கருச்­சி­தைவு, குறைப்பிர­ச­வம், குறைந்த எடை­யு­டன் குழந்தை பிறத்­தல் போன்­ற­வற்றை தடுக்க உத­வு­கிறது.

பிர­ச­வத்­திற்கு முன்பு தாய்­மார்­கள் அள­வுக்கு அதி­க­மாக மொச்சை பயிறு சாப்­பி­டு­வது குழந்­தைக்கு ரத்த சோகையை ஏற்­ப­டுத்­த­லாம் என சில ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

எனவே கர்ப்ப காலத்­தில் மருத்­து­வ­ரின் ஆலோசனை­யைப் பெற்று போது­மான அளவு மொச்சை பயறை உண­வில் சேர்த்­துக் கொள்ளலாம்.

இதய ஆரோக்­கி­யம்

மொச்சை பய­றில் மக்­னீ­சி­யம் அதி­க­ளவு உள்­ளது. இந்த மக்­னீ­சி­யம் ரத்த அழுத்­தத்தை குறைக்க உத­வு­கிறது. இதி­லுள்ள கரை­யக்­கூ­டிய நார்ச்­சத்­து­கள் கொலஸ்ட்­ரால் அளவை குறைத்து இதய நோய்­கள் வரா­மல் தடுக்­கிறது.

ரத்­தத்­தில் உள்ள கெட்ட கொழுப்­பின் அளவை குறைத்து நல்ல கொலஸ்­டி­ரால் (எச்­டி­எல்) அளவை அதி­க­ரிக்­கச் செய்­கிறது. இதய ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த உத­வு­கிறது.

​உட­லுக்கு தேவை­யான

ஆற்­றலை வழங்­கு­கிறது

மொச்சை பய­றில் இரும்­புச் சத்து இருப்­ப­தால் ரத்த சிவப்­ப­ணுக்­கள் உற்­பத்தி மற்­றும் ஆற்­றல் உற்­பத்­திக்கு உத­வு­கிறது. ரத்த சோகை போன்ற இரும்­புச் சத்து குறைப்­பாட்டை போக்­கு­கிறது. எனவே உடல் எப்­பொ­ழு­தும் சோர்­வாக இருப்­ப­வர்­கள் மொச்சை பயறை தங்­கள் உண­வில் சேர்த்­துக் கொள்­ள­லாம். இந்த மொச்சை பய­றில் உள்ள நார்ச்­சத்­துக்­கள் ரத்த சர்க்­கரை அளவை கட்­டுப்­பாட்­டில் வைக்க உத­வு­கிறது.

ஆஸ்­டி­யோ­போ­ரோ­சிஸை

தடுக்­கிறது

மொச்சை பய­றில் உள்ள மாங்­க­னீஸ் சத்து, ஆஸ்­டி­யோ­போ­ரோ­சிஸ் போன்ற எலும்பு சம்­பந்­த­மான நோயை தடுக்க உத­வு­கிறது. கால்­சி­யம் குறைப்­பாட்டை போக்கி எலும்­பின் வலி­மைக்கு உத­வு­கிறது.

​நோயெ­திர்ப்பு சக்தி:

மொச்சை பய­றில் உள்ள தாமி­ரச்­சத்து ஆரோக்­கி­ய­மான ரத்த வெள்ளை அணுக்­களை உற்­பத்தி செய்ய உத­வு­கிறது. இத­னால் நோயெ­திர்ப்பு சக்தி அதி­க­ரிக்­கிறது.