சீனமொழி விருதுகளுக்கு முன்மொழியப்பட்ட இந்தியர்

சீனமொழி விருதுகளுக்கு முன்மொழியப்பட்ட இந்தியர்

1 mins read
72fbb6a5-5c58-472f-af2f-916abd3896eb
-

மீடி­ய­ாகார்ப்­பின் சீன­மொழி ஸ்டார் விரு­து­களில் இவ்­வாண்டு ஓர் இந்­தி­யர் விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளார். தாஸ் டிடி என்று அழைக்­கப்­படும் தர்­ம­தாசா டி தர்­ம­சேனா (படம்) சிறந்த வள­ரும் நட்­சத்­தி­ரம் எனும் பிரி­வில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளார்.

ஸ்டார் விரு­து­கள் மீடி­ய­கார்ப்­பின் சீன நிகழ்ச்­சி­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

மீடி­யா­கார்ப் வழங்­கும் '#ஜஸ்ட்ஸ்­வைப்லா' எனும் இணை­ய­வழி மாண்­ட­ரின் பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­யின் படைப்­பா­ள­ராக தாஸ் டிடி ஈராண்­டு­க­ளாக இருந்­து­வ­ரு­கி­றார்.

பள்­ளி­யில் இரண்­டாம் மொழி­யாக மாண்­ட­ரின் பயின்­ற­தாக 33 வயது தாஸ் டிடி கூறி­னார்.

உள்­ளூர் கலை­ஞர் குர்­மித் சிங் மட்­டுமே இதுவரை ஸ்டார் விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்ட இந்­திய வம்­சா­வ­ளி­யி­னர் ஆவார்.