பாதுகாப்பான முறையில் நகங்களைப் பேணிக்காப்போம்

பெண்களைக் கவரும் அழகுப் பராமரிப்புச் சேவைகளில் நகப்பூச்சு மிகப் பிரபலமாக உள்ளது. முக சருமத்தைப் பராமரிப்பது போல ஒருவர் தனது நகங்களையும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர். பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலும் நக ஆரோக்கியத்துக்கு நேரத்தை ஒதுக்க பல பெண்கள் முற்படுகின்றனர்.

வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது பல பெண்கள் நக அலங்கார நிலையங்களில் கூடுவதை நாம் காணலாம். நக வடிவங்களை மாற்றி அமைப்பதிலிருந்து நகத்தின் புறத்தோலைத் திருத்துவது வரை பல வகைகளில் ஒருவர் தனது நகங்களைப் பேணிக்காக்கலாம். பெரும்பான்மையான நக அலங்கார நிலையங்களில் பெண்கள் நகப் பராமரிப்புச் சேவையை நாடிய பிறகு நகங்கள் அழகாக மிளிர்வதற்கு நகத்துக்கு சாயம் பூசுவது வழக்கம்.

‘மெனிகியோர்’, ‘பெடிகியோர்’ என்றழைக்கப்படும் நக அலங்காரச் சேவைகளான அவற்றை இளம் வயது பெண்களிலிருந்து அனைத்து வயது பெண்களும் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ளத் தவறுவதில்லை. இந்தச் சேவை பலவிதமாக இருந்தாலும் சில காலத்திற்கு முன் ‘ஜெல்’ வகை நகத்துக்கு சாயம் பூசும் சேவை உதயமானதிலிருந்து பெண்கள் பலரும் அதை மட்டும் பெரிதாக நாடத் தொடங்கினர்.

ஜெல் நகப்பூச்சு ஒருவரின் நகத்தில் சீக்கிரம் காய்ந்து விடுவதோடு ஒருவர் நகப்பூச்சு பூசிய கையோடு அது நீண்ட நாள் நகங்களில் இருக்கும் என்ற நிம்மதியோடு தங்கள் அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தலாம். இதனால் பல பெண்கள் நக அலங்கார நிலையங்களுக்குச் சென்றாலே ஜெல் வகை நகப்பூச்சு சேவைக்கு காந்தம் போல இழுக்கப்படுகின்றனர்.

ஆனால் ஜெல் நகப்பூச்சு நம் நகங்களுக்குப் பல உபாதைகளையும் கொண்டு சேர்க்கிறது. அழகாக காட்சியளிக்கும் நகங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஜெல் நகப்பூச்சினால் நகங்கள் சீக்கிரமாக உடையக்கூடிய அபாயம் நிலவுகிறது. அதிகளவிலான நகப்பூச்சு நகங்களை விரைவாக உரிந்துவிடும்.

அதற்கும் மேலாக இது தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைப் பெரிதளவில் அதிகரிக்கவும் செய்கிறது. சாதாரணமாக நகப்பூச்சை அகற்ற நகப்பூச்சு நீக்கி எனும் இரசாயனக் கரைசலைப் பயன்படுத்தலாம். ஆனால் ஜெல் நகப்பூச்சுக்கு அசிட்டோன் எனும் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கரைசலை வைத்து தான் அகற்ற முடியும்.

அசிட்டோன் ஒருவரின் சருமத்தை உலர வைக்கும் தன்மை கொண்டது. மேலும் நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்தினால் அது உடல் உறுப்புகளையும் பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. நகப்பூச்சு நீண்ட காலம் நம் நகங்களில் நீடித்து இருக்க அழகு நிலையங்களில் ஜெல் நகப்பூச்சுக்கு புற ஊதா ஒளி பயன்படுத்தப்படுவதால் அது புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் உள்ளது.

அவசர காலத்திற்கு ஜெல் நகப்பூச்சு ஒரு சிறந்த தெரிவாக இருந்தாலும் அதனால் காத்திருக்கும் பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதால் பெண்கள் பாதுகாப்பான வழிமுறைகளை நாடலாம். ஜெல் நகப்பூச்சு அளிக்கும் அதே பயன்களைப் பிற தெரிவுகளும் அளிக்கின்றன.

இணையத்திலும் கடைகளிலும் விற்கப்படும் செயற்கையான நகங்களைப் பசையை வைத்து நம் நகங்களில் ஒட்டி வைத்துக்கொண்டால் அது ஜெல் நகப்பூச்சுக்கு ஈடான உணர்வை அளிக்கும். ‘டிப் பவுடர்’ எனும் வேறு வகையான நகப்பூச்சில் ஒருவர் தங்கள் நகங்களை நகப்பூச்சு நிறைந்த ஒரு புட்டிக்குள் ஊற வைத்தால் மட்டும் போதுமானது.

இயற்கையான வடிவில் சாதாரணமான நகப்பூச்சு பூசி நம் நகங்களை பாதுகாத்துக்கொண்டால் அதை விட நம் நகங்களைப் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேறு எதுவும் தேவை இல்லை என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!