மெகா இந்­தியா எக்ஸ்போ கண்­காட்­சி­

2 mins read
fd130565-b27e-41c1-9bbd-653210f09de6
மெகா இந்­தியா எக்ஸ்போ கண்­காட்­சி. - படம்: சபிதா ஜெயகுமார் 

மெகா இந்­தியா எக்ஸ்போ கண்­காட்­சி­ ஜூன் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி ஞாயிறு இரவு வரை சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடை­பெ­றுகிறது.

‘எம்ஜெஎஃப் கண்காட்சிகள்‘ ஏற்பாட்டில், ஷாபாஸ் இந்த மெகா கண்காட்சியை வழங்குகிறது.

புகழ்­பெற்ற திரைப்பட நட்சத்திரமான நடிகர் சதீஷ், இன்று கண்­காட்­சி­யில் பங்­கு­பெ­றுகிறார்.

இந்த இல­வசக் கண்­காட்சி நாள்­தோ­றும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை இடம்பெறும். மொத்­தம் 150க்கு மேற்பட்ட உள்­ளூர், வெளி­யூர் வர்த்­த­கங்­கள் இந்தக்­ கண்­காட்­சி­யில் பங்கு­பெற்றுள்ளன.

மலேசியாவிலும் இந்தியாவிலும் பல்­வேறு மாநி­லங்­களில் இயங்­கும் வணிகங்கள் கண்காட்சியில் தங்கள் கூடங்களை அமைத்துள்ளன.

கண்­காட்­சி ஏற்­பாட்­டா­ள­ரும் ஷாபாஸ் நிறு­வன உரி­மை­யா­ள­ரு­மான திரு அப்­துல் மாலிக், இந்­நி­கழ்வு மக்­களை பல­த­ரப்­பட்ட பொருள்க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தோடு, உள்­ளூர், வெளி­யூர் வர்த்­த­கங்­கள் சந்­திப்­ப­தற்­கான தள­மா­க­வும் இக்கண்காட்சி விளங்கும் என்று தெரிவித்தார்.

பஞ்­சாபி உடை­கள், சேலை­கள், ரவிக்­கை­கள், பாவா­டை­கள், மற்ற வட­இந்­திய உடை­கள் ஆகி­ய பல­வி­த­மான பாரம்­ப­ரிய இந்­திய ஆடை­களைக் கண்காட்சியில் வாங்கலாம். 

அறை­க­லன்­கள், வீட்­டுப் பயன்பாட்டுப் பொருள்கள், ஆடை அணி­க­லன்­கள், ஓவியங்கள்,கைவினைப் பொருள்கள் முத­லி­ய­வற்றை வழங்­கும் இக்­கண்­காட்­சி­யில், புது வர­வு­க­ளை­யும் வேறு­பட்ட வடி­வ­மைப்­பு­க­ளை­யும் மக்­கள் எதிர்­பார்க்க­லாம்.

பொருள்கள் வாங்குவதற்காக கண்காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்கள் நடந்து களைப்படைந்தால் நிகழ்ச்சிகளை ரசித்தபடி இந்திய ரோஜாக், இந்­தியப் பல­கா­ரங்­கள் போன்ற உணவுவகைகளைச் சுவைக்கலாம்.

மேலும், சிறுவர்கள் உற்சாகத்துடன் விளையாட ‘பவுன்சிங் காசல்’ அமைக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமைவரை மாறு­பட்ட மேடை கலை­நி­கழ்ச்­சி­கள் இடம்பெறும் என்ற திரு அப்­துல் மாலிக், மேடைக்­காக ஏங்­கும் கலை­ஞர்­க­ளுக்கு இந்தக் கண்­காட்சி ஊக்­கம் அளிக்­கும் என்று நம்­பு­வ­தா­க­வும் சொன்னார் . 

“கண்காட்சியில் நிறைய பொருள்களை வாங்க வேண்டும் என ஆசையாக உள்ளது. இம்முறையும் பெரும் கூட்டத்தை வரவேற்கும் வகையில் கண்காட்சி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் திருவாட்டி ராஜேஸ், 65. 

‘கேலக்ஸி இம்பெக்ஸ்’ கடையின் ஊழியரான சிவரஞ்சினி, 19, தங்களது கடையில் பலதரப்பட்ட பஞ்சாபி சூட் வகைகள் விற்கப்படுவதாக கூறினார். வரும் நாள்களில் மேலும் அதிகமான கூட்டத்தை எதிர்பார்க்கிறார் இவர். 

நிகழ்ச்சிக்கு வரும் நடிகர் சதீஷைக் காண்பதற்காக மக்கள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்