பழக்கங்களை மாற்றினால் உடல்நல பாதிப்பைக் குறைக்கலாம்

‘வீடு’ என்ற சொல் பலரின் மனங்களில் ஓர் இதமான உணர்வை ஏற்படுத்தும். 

பெரும்பாலான மக்கள் தங்கள் இல்லங்களில் தான் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவர்.

ஆனால், வீடுகளில் நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் உடல்நிலையைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

அத்தகைய பழக்கங்கள் குறித்து ஆராய்ந்து வந்தது தமிழ் முரசு.

ஊட்டச்சத்தற்ற கலோரிகள்

வீடுகளின் அலமாரிகளில் ஐஸ்கிரீம், பிஸ்கட், சிப்ஸ் போன்ற ஊட்டச்சத்தற்ற தின்பண்டங்களை அடுக்கி வைத்திருப்பது நம்மை அவற்றைத் தொடர்ந்து உண்ணத் தூண்டுமென்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். 

பிற்பகல் மூன்று மணி முதல் இரவு உறங்கும் வரை ஏற்படும் உணவு சார்ந்த வேட்கையைத் தவிர்ப்பது கடினமென்பதால், வீட்டிலிருக்கும் உணவுப் பொருள்களை உண்பது இயல்பானதே. வீட்டில் ஊட்டச்சத்தற்ற உணவுப் பொருள்கள் நிறைந்திருப்பதால்,தேவையற்ற கலோரிகளை உட்கொள்ள நேரிடுகிறது. உடல் எடை கூட அது வழிவகுக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

ஆகையால், இத்தகைய உணவுப் பொருள்களை வீட்டில் அதிக அளவில் அடுக்கி வைப்பதைத் தவிர்க்கலாம்.

தின்பண்டங்களால் எவ்வளவு கலோரி உடலில் சேர்கிறது என்பதைக் காட்டும் அட்டையைக் கண்ணுக்குத் தெரியும் இடத்தில் வைத்திருக்கலாம். மனம் விரும்பும் தின்பண்டத்தை அறவே தவிர்க்க முடியாது என்று தோன்றினால், ஒவ்வொருமுறை அந்தத் தின்பண்டத்தை உண்ணும் போதும், அதன்மூலம் உட்கொள்ளும் கலோரி அளவை அந்த அட்டையில் பார்க்கலாம். 

ஒரே வேளையில் அத்தின்பண்டத்தை மீண்டும் எடுக்கவிடாமல் அது தடுக்கக்கூடும்.

ட்டா தூரத்தில் ஊட்டச்சத்து

மனம் விரும்பும் ஊட்டச்சத்தற்ற தின்பண்டங்களைக் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் போன்றவற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைப்பது நம்மில் பலரும் செய்யும் தவறாகும்.

கண்களுக்கு எளிதில் தென்படும் இடத்தில் ஒரு கூடை நிறைய பழங்களை வைத்தால், நமக்கு பழங்களை உண்ண வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்குமென்று ஆய்வுகள் கூறுகின்றன. 

டுக்கை அறையில் மின்னிலக்கம்

‘பீடியாட்ரிக் ஒபிசிட்டி’ என்ற அறிவியல் சஞ்சிகையில், இரவு உறங்கும் வரையில் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தும் பிள்ளைகள் பெரும்பாலும் தரம் குறைந்த வாழ்வியல் பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

இப்பிள்ளைகளுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதில்லையென்றும் தெரியவந்துள்ளது.

தூங்குவதற்குமுன் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தும் பிள்ளைகள் அப்பழக்கம் இல்லாதவர்களைவிட கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிக உடல் எடை கொண்டிருப்பதாக அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், உறங்குவதற்குக் குறைந்தது 30 நிமிடங்களுக்குமுன் மின்னிலக்க சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்திவிடுவது சீரான உடல்நலத்திற்கு வித்திடும்.

திக ஒளி, குறையும் உறக்கம்

இரவில் படுக்கை அறையை அதிக வெளிச்சமாக வைத்திருப்ப்போரால் தரமான உறக்கத்தைப் பெற முடிவதில்லை என்று ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியோலஜி’ எனும் சஞ்சிகை கூறுகிறது.

இரவுநேரத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் வெளிச்சத்தைக் கண்களால் உணர முடிவதால், நம்மால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல முடிவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒப்புநோக்க, ஒளியில்லாத அல்லது ஒளி குறைந்த அறைகளில் உறங்குபவர்களைவிட வெளிச்சம் நிறைந்த அறைகளில் உறங்குபவர்கள் உடற்பருமனுக்கு ஆளாகும் வாய்ப்பு 21 விழுக்காடு அதிகம் என்று கூறப்படுகிறது.

இன்பத்தின் ஊற்றாய் விளங்க வேண்டிய வீட்டுச் சூழலே உடல்நிலைக்குப் பாதகமாக விளங்குவதைத் தவிர்ப்பது நமது கடமை.  

அதைக் கருத்தில்கொண்டு அன்றாட வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்களைச் செய்வதால் வாழ்நாள் முழுதும் நமது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்ய இயலும். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!