இறுதி மாதவிடாய்க்குப் பிறகு சுரப்பி மாற்று சிகிச்சை; நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம்

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு சுரப்பி மாற்று சிகிச்சை; நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம்

2 mins read
ebb36792-6cf0-4f54-9438-23aafedf0433
ஆய்வு 2000ஆம் ஆண்டு தொடங்கியது. அதில் 60,000க்கும் மேற்பட்ட டென்மார்க் பெண்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெண்கள் தங்களின் இறுதி மாதவிடாய்க்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க சில காலம் சுரப்பி மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டாலே அது நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் என்று டென்மார்க் ஆய்வு ஒன்று கூறுகிறது.

‘தி பிம்ஜே’ மருத்துவ சஞ்சிகை டென்மார்க்கில் தேசிய அளவில் ஆய்வை நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு சஞ்சிகை தொடங்கியது. அதில் 60,000க்கும் மேற்பட்ட டென்மார்க் பெண்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவர்களில் 5,589 பேர் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆய்வில் கலந்துகொண்டவர்களில் கிட்டத்தட்ட 18,000 பேர் சுரப்பி மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள். அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் 53 வயதுக்கு முன்னரே சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள்.  அவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சராசரியாக நான்கு ஆண்டுகள் சிகிச்சை மேற்கொண்ட பிறகு நிறுத்திவிடுகின்றனர்.

சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் 90 விழுக்காட்டினர் மாத்திரை, மருந்துகளை மட்டுமே உண்டுள்ளனர். 

சுரப்பி மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் இடையில் எடுக்கப்பட்ட தரவுகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

அதில் சுரப்பி மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் 24 விழுக்காட்டினர் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையை 12 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தவர்களில் 74 விழுக்காட்டினர் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் சிலர் சுரப்பி மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு அவர்களிடம் நரம்பியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இருப்பினும் சுரப்பி மாற்று சிகிச்சை மட்டுமே நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறினர். 

இந்நிலையில் இந்த ஒரு ஆய்வை மட்டும் வைத்துக்கொண்டு சிகிச்சை முறையை மாற்ற முடியாது என்று லண்டன் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் ஆரோக்கியம் மற்றும் முதுமை பிரிவில் பணியாற்றும் டாக்டர் சாரா நயோமி ஜேம்ஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்