தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதைக்களத்தில் ஷாநவாஸின் ‘மூன்றாவது கை’

2 mins read
ca343cb1-3993-4c71-b944-57d9cd3cbcdb
மூன்றாவது கதை நூல் - கோப்புப் படம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, சிங்கப்பூர்  தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது. 

சிங்கப்பூர்ச் சூழலில் மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் சமூக, குடும்பப் பிரச்சினைகளைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள திரு. ஷாநவாஸின் ‘மூன்றாவது கை’ சிறுகதைத் தொகுப்பை தமிழ் இலக்கிய ஆர்வலர் திருவாட்டி அ.மஹ்ஜபீன் அறிமுகம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கிறது.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட  போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

ஆகஸ்ட் மாதக் கதைக்களத்தில் கவிஞர், எழுத்தாளர் மகேஷ்குமாரின் ‘உடுமலைக்காரன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் கலந்துரையாடல் இடம்பெறும்.

அடுத்த மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள நூல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன. மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஆகஸ்ட் மாத சிறுகதை எழுதும் போட்டிக்கு  எழுதுவதற்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள்  எழுத வேண்டும். ‘பேருந்திலிருந்து இறங்கிய பிறகுதான் என் கைகளில் பை இல்லாததை உணர்ந்தேன்.’

இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும். ‘ஓசையின்றி கதவைத் திறந்து, இருட்டு கண்களுக்குப் பழகுவதற்காகச் சில நொடிகள் காத்திருந்தான்.’

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும். ‘வெங்காய முட்டை பரோட்டாவின் மணம், மனக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தது.’

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/

செய்தி: பிரேமா மகாலிங்கம்

குறிப்புச் சொற்கள்