‘தாய்ச்சி’ தற்காப்புக் கலை மூளைக்கும் உடலுக்குமானது

‘தாய்ச்சி’ தற்காப்புக் கலை மூளைக்கும் உடலுக்குமானது

2 mins read
8dc59e9f-0b7c-4fa3-ae66-9fe7309d1250
மெதுவான, பாயும் அசைவுகள் மற்றும் ஆழமான சுவாசத்தை உள்ளடக்கியது தாய்ச்சி. - படம்: நியூயார்க் டைம்ஸ்

உலகின் ஆகப் பிரபலமான உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஒன்றாக ‘தாய்ச்சி’ தற்காப்புக் கலை கருதப்படுகிறது. சீனாவில் 17வது நூற்றாண்டில் தற்காப்புக் கலையாக அது தோற்றுவிக்கப்பட்டது.

‘கராத்தே’, ‘டேக்வாண்டோ’ தற்காப்புக் கலைகளைப்போல இல்லாமல் சண்டைப் பயிற்சிக்குப் பதிலாக மீள்திறனில் தாய்ச்சி கவனம் செலுத்துகிறது.

எனவே வயதில் மூத்தவர்களுக்கு அல்லது காயம் அடைந்தவர்களுக்கு இந்தத் தற்காப்புக் கலை பொருத்தமானதாக இருக்கிறது.

மெதுவான, பாயும் அசைவுகள் மற்றும் ஆழமான சுவாசத்தை உள்ளடக்கியது தாய்ச்சி. சமநிலை, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த இது உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது.

வலிமை, நீக்குப்போக்கு, சிந்தனையை மேம்படுத்த கவனம் மற்றும் உடல் ரீதியான முயற்சியின் கலவையாக தாய்ச்சி விளங்குவதாக நிபுணர் பீட்டர் வெய்ன் கூறுகிறார்.

இடம், கற்பித்தல் முறை தமக்கு ஒத்துப்பட்டு வருமா என்பதைத் தெரிந்துகொள்ள குறைந்தது இரண்டு வகுப்புகளிலாவது பங்கேற்க வேண்டும்.

“தாய்ச்சி அனுபவ அடிப்படையிலானது. நீங்கள் அதில் ஈடுபட்டு அதுகுறித்த அனுபவத்தைப் பெற வேண்டும்,” என்று அந்தத் தற்காப்புக் கலையில் ஈடுபட்டுவரும் ஷெர்லி சோக், 48, சொன்னார்.

குறிப்பாக, உடலை வளைக்க நேரிடும் யோகா போன்ற நடவடிக்கைகளைவிட தாய்ச்சி கடுமை குறைவானது.

தியானம் போன்ற உத்திகளுக்கும் மாறுபட்டது தாய்ச்சி. ஏனெனில், உடல் அசைவுடன் மூச்சுப் பயிற்சியையும் அது இணைக்கிறது. இதன் பலனாக, நரம்பு மண்டலம் அமைதியடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயிற்றுவிப்பாளர்களுக்கென தரப்படுத்தப்பட்ட சான்றளிப்பு முறை இல்லை என்று சொன்ன திரு வெய்ன், பள்ளிகளையும் வகுப்புகளையும் இணையத்தில் தேடும்படி பரிந்துரைக்கிறார்.

தாய்ச்சி தற்காப்புக் கலையில் அடித்தளம் அமைத்துக்கொண்டாலும் அநேகமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபட தேவையிராது.

குறிப்புச் சொற்கள்