நன்மைக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் எடை குறைப்பு; அறிகுறிகளும் ஆலோசனைகளும்

உடல் எடைக் குறைப்பு எளிதன்று. எப்படியாவது எடையைக் குறைத்துவிட வேண்டும் என்பதற்காக ஒழுங்காக சாப்பிடாமல் சிலர் தங்களையே வருத்திக்கொள்கின்றனர்.

உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சி நன்மையைவிட தீங்கு இழைப்பதைக் காட்டும் ஏழு அறிகுறிகளைப் பற்றியும் உடல் எடையைக் குறைக்க கடைப்பிடிக்க வேண்டிய முறையான உத்திகளைப் பற்றிய ஆலோசனைகளையும் சற்று பார்ப்போம்.

  1. உடலுக்குத் தேவையான கலோரியை வெகுவாகக் குறைப்பது- உடல் எடை குறைக்க கலோரிகளைக் குறைப்பது மிகவும் அவசியம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அது உடலுக்குத் தீங்கு இழைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போகின்றன. ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுவதுடன் தசை இழப்பு, எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. அதுமட்டுமல்லாது, வளர்சிதை மாற்றம் மெதுவடைகிறது. நாளடைவில் உடல் எடையைக் குறைப்பது சிரமமாகிவிடுகிறது.
  2. சிலவகை முக்கிய உணவுவகைகளை முற்றிலும் தவிர்ப்பது- உடல் எடையைக் குறைக்கும் நோக்குடன் பலர் மாவுச்சத்து அல்லது கொழுப்பு உள்ள உணவுவகைகளை முற்றிலும் தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் அனைத்தையும் அளவோடு உண்பது நன்மை பயக்கும். மாவுச்சத்து உடலுக்கும் மூளைக்கும் தேவையான சக்தியைத் தருகிறது. அது அறவே இல்லாத பட்சத்தில் சோர்வு, தலைசுற்றல், கவனம் செலுத்த முடியாத நிலை ஆகியவை ஏற்படக்கூடும்.
  3. உணவுக்குப் பதிலாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது- பல உடல் குறைப்புத் திட்டங்கள் உணவுக்குப் பதிலாக ஊட்டச்சத்து மாத்திரைகளை ஊக்குவிக்கின்றன. ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவோடு உட்கொண்டால் அவை நன்மையைத் தரும். ஆனால் உணவு உட்கொள்ளாமல் மாத்திரைகளை மட்டுமே சாப்பிட்டால் போதுமான ஊட்டச்சத்து இல்லாத நிலை ஏற்படும் சாத்தியம் அதிகம். உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து, தாதுப்பொருள் ஆகியவற்றை ஆரோக்கியமான உணவுமுறை தருகிறது என்பது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  4. உணவுக்கு ஏங்குதல், குற்ற உணர்வு- உடல் குறைப்புப் பயணம் ஆரோக்கியமானதாக இருந்தால் பிடித்த உணவுக்கு ஏங்கும் நிலை ஏற்படக்கூடாது. அப்படியே அவற்றைச் சாப்பிட்டாலும் குற்ற உணர்வு ஏற்படக்கூடாது. அவ்வப்போது அவற்றைச் சாப்பிடுவதால் தவறு ஏதுமில்லை. பிடித்த உணவைச் சாப்பிடாமல் தம்மைத் தாமே வருத்திக்கொண்டால் அது நாளடைவில் மனநிலையைப் பாதிக்கும். இதனால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
  5. மனநலம், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது- உடல் எடையைக் குறைக்கும்போது மனநலம், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவற்றைப் புறக்கணித்துவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும்.
  6. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது- உணவைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே உடல் எடையைக் குறைக்க முற்படக்கூடாது. உடல்பயிற்சி செய்வதும் அவசியம். அப்போதுதான் ஒட்டுமொத்த அடிப்படையில் ஆரோக்கியமாக இருக்கலாம்.
  7. உடனடித் தீர்வுகளை நாடுவது- உடல் எடையைக் குறைக்க உடனடித் தீர்வு தருவதாகக் கூறும் முறைகளை அல்லது திட்டங்களைத் தவிர்த்துவிட வேண்டும். பொதுவாக இத்தகைய முறைகள் அல்லது திட்டங்கள் தொடக்கத்தில் உடல் எடையைக் குறைப்பது போலத் தோற்றமளிக்கும். ஆனால் நீண்டகாலத் தீர்வுகளை அவை தராது.
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!