உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் புதிய பொறுப்பாளர்கள்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழகத்தில் நடைபெற்ற பதினோராம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அம்மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் இம்மாதம் 8ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் மு. பொன்னவைக்கோ வரவேற்புரை ஆற்றியதை அடுத்து அமெரிக்காவின் சிக்காகோவில் நடைபெற்ற 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கும் 11வது உலகத் தமிழ் மாநாட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கினார்.

சென்னையில் உள்ள இலயோலா கல்லூரியிலும் நாமக்கல்லில் உள்ள கல்லூரியிலும் தேசிய அளவிலான கருத்தரங்கங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 

திரு அரசர் அருளாளர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து மூன்று துணைத் தலைவர்களாக முனைவர் ஜான் சாமுவேல் (இந்தியா), முனைவர் ஃபிரான்சிஸ் எஸ். முத்து (அமெரிக்கா), திரு எஸ். மணியம் (சிங்கப்பூர்) ஆகியோரையும் மூன்று பொதுச்செயலாளர்களாக முனைவர் ப. மருதநாயகம் (இந்தியா), முனைவர் சண்முகதாஸ் (இலங்கை), திரு ரவி பாலா (அமெரிக்கா) ஆகியோரையும் இரண்டு பொருளாளர்களில் ஒருவராக திரு நாகமாணிக்கம் கணேசன் (அமெரிக்கா) மற்றும் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் வெ. முருகன் (இந்தியா), முனைவர் முகிலை இராசபாண்டியன் (இந்தியா) ஆகியோரையும் பிற பொறுப்பாளர்களாகப் புதிய தலைவர் திரு அரசர் அருளாளர் தேர்ந்தெடுத்தார்.

200க்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். சிங்கப்பூரைச் சேர்ந்த திரு எஸ் மணியம், ஏற்பாட்டுக் குழுவில் செயலாற்றினார். அவருடன் சிங்கப்பூர் தரப்பிலிருந்து முன்னாள் தமிழ் ஆசிரியரான முனைவர் ஸ்ரீலட்சுமி கட்டுரை மறுஆய்வுக்குழுவில் இடம்பெற்றார்.

“மாநாட்டில் படைக்கப்பட்ட 1,075 கட்டுரைகளில் 200 ஆய்வுக்கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன,” என்று திரு எஸ் மணியம் கூறினார்.

மலேசியாவிலிருந்து சென்ற 10 பேராளர்களில் மூவர் மொழியியல் பற்றிய கட்டுரைகளை வாசித்தனர், எஞ்சியோர் பார்வையாளர்கள்.

11ஆம் உலகத் தமிழ் மாநாடு நிறைவடைந்ததும் புதிய பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாநாடு பிரான்ஸ், சிங்கப்பூர் அல்லது இலங்கையில் நடைபெறக்கூடும் என்றார் திரு மணியம். மேல்விவரங்களுக்கு www.iatrofficial.org என்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இணையத்தளத்தை நாடலாம்.

இந்நிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எதிர்வரும் 21, 22, 23ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. சிங்கப்பூரிலிருந்து 75 பேர் கொண்ட பேராளர் குழு இந்த மாநாட்டிற்கு வியாழக்கிழமை புறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!