தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நடப்போம் - நல்லிணக்கத்தைக் கொண்டாடுவோம்’

2 mins read
f383eb07-f800-419e-a829-1b8625284f79
2023ஆம் ஆண்டின் இன நல்லிணக்க நாள் ‘நடப்போம் - நல்லிணக்கத்தைக் கொண்டாடுவோம்’ எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. - படம்: சன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டப இணையத்தளம்

தேசிய மரபுடைமை நிலையத்தின் சார்பில் இவ்வாண்டின் இன நல்லிணக்க நாள் ‘நடப்போம் - நல்லிணக்கத்தைக் கொண்டாடுவோம்’ எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரர்கள் அனைவரும், மற்ற இனத்தவரின் மரபுகளையும் பண்பாட்டையும் அனுபவப்பூர்வமாகப் அறிந்துகொள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்திய மரபுடைமை நிலையம், மலாய் மரபுடைமை நிலையம், சன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபம் ஆகியவை இணைந்து வழங்கும் இவ்விழாவில், ஜூலை 22, 23ஆம் தேதிகளில் பன்முகக் கலாசார நிகழ்வுகள் பலவற்றை எதிர்பார்க்கலாம்.

இந்திய மரபுடைமை நிலையம் சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகள்:

இந்திய மரபுடைமை நிலையம்.
இந்திய மரபுடைமை நிலையம். - படம்: தேசிய மரபுடைமை நிலையம்

நல்லிணக்கத் தேநீர் விருந்து

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்படும் நிகழ்வான இந்தத் தேநீர் விருந்தில், சுவையான இந்திய, மலாய், சீன, யுரேசிய வகை உணவுகளைச் சுவைப்பதோடு ஒவ்வொரு உணவிற்கும் பின்னால் உள்ள கதைகளையும், பலதரப்பட்ட மரபுகளையும் அறிந்துகொள்ளலாம்.

நாள்: 23 ஜூலை, 11 மணி, [Ϟ]2 மணி

இடம்: இந்திய மரபுடைமை நிலையம்

நுழைவுக்கட்டணம்: $15

கைவினைப் பயிலரங்கு

பாரம்பரிய இந்திய, மலாய், சீனக் காலணிகளின் வடிவமைப்புப் பாணியில், படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், காலணி அழகுபடுத்தும் பயிலரங்கு நடத்தப்படுகிறது.

நாள்: 23 ஜூலை, 10 மணி முதல் 5 மணி வரை

இடம்: இந்திய பாரம்பரிய மையம்

நுழைவு அனுமதி இலவசம்.

பாரம்பரிய விளையாட்டுகள்

குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தியப் பாரம்பரிய விளையாட்டுகளில் சிலவற்றைப் பார்க்கவும், பாரம்பரிய இனிப்பு, உணவு வகைகளைச் சுவைக்கவும் வாய்ப்பு அளிக்கிறது இந்திய மரபுடைமை நிலையம்.

நாள்: ஜூலை 23, 10 மணி முதல் 5 மணி வரை

இடம்: இந்திய மரபுடைமை நிலையம்

நுழைவு அனுமதி இலவசம்.

சமய ஒலி அனுபவங்கள்

‘சிங்கப்பூரில் உள்ள சமயங்களின் ஒலிக்காட்சிகள்’ எனும் ஒலி அனுபவ நிகழ்வு இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெறுகிறது.

பல சமயத்தினர் வாழும் சிங்கப்பூரில் ஒலியியல் சூழலை அனுபவிக்கும் வகையில் கிறிஸ்தவப் பாடல்கள், சீக்கிய கீர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு சமயம் சார்ந்த பாடல்கள் ஒலிக்கப்படும். சமய ஒற்றுமையை வெளிக்கொணரும் உணர்வுப்பூர்வ பயணமாக இது அமையும்.

மேலும், யுரேஷியர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் ஜூலை 23ஆம் தேதி 3.30 மணி முதல் நடத்தப்பட உள்ளன.

தொகுப்பு: லாவண்யா வீரராகவன்

குறிப்புச் சொற்கள்